தாயகம் திரும்புமாறு ஜனாதிபதி அழைப்பு
நாட்டில் சுதந்திரமும் ஜனநாயகமும் நிலைநாட்டப்பட்டுள்ள நிலையில் தாய்நாட்டிற்குத் திரும்பி வந்து நாட்டுக்காக சேவை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா கூட்டத்தொடரில் 2012ஆம் ஆண்டு அரசாங்கத்தின் நீதியமைச்சராக முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பங்குகொண்டமை தமிழ் மக்களுக்கு எதிரான காட்டிக்கொடுப்பு என்று கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மகுல்தெனிய பகுதியில் 75 வீடுகள் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் இந்த பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் வழங்க இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். 
கொழும்பு, வாட் பிளேசிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, உயர் தேசிய தொழில்நுட்ப டிப்ளோமா பாடநெறி (HNDA) மாணவர்களை தாக்கியமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவர் அடங்கிய சுயாதீன குழுவொன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சிறி ஹெட்டிகே இன்று (02) தெரிவித்துள்ளார்.