30102024Wed
Last update:Wed, 02 Oct 2024

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை குறித்து மீளாய்வு: பாராளுமன்றில் மங்கள

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடையை நீக்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் தொடர்பில் பாராளுமன்றில் இன்று விசேட அறிக்கையொன்றை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்து உரையாற்றினார்.


இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் - ஐரோப்பிய பிரதிநிதிகள் அடுத்த வாரம் இலங்கை வருகை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் பின் ராட் எதிர்வரும் ஜூனில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இந்த தகவலை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயம் இலங்கை தொடர்பில் புதிய நோக்கத்துக்கு வழிவகுக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் 450 ஏக்கர் நிலத்தை விடுவிக்க அரசாங்கம் தீர்மானம்

வடக்கில் அதியுயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினர் வைத்திருக்கும் நிலத்தில் ஆயிரம் ஏக்கர் நிலத்தை உரிமையாளர்களுக்கு மீள கையளிப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்ததுடன், முதல் கட்டமாக 450 ஏக்கர் நிலத்தை எதிர்வரும் திங்கட்கிழமை விடுக்க தீர்மானித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் காணிகளை உரிமையாளர்களுக்கு வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார்.

புலம் பெயர்ந்தவர்கள் அச்சமின்றி தாராளமாக இலங்கை வரலாம் தமிழ் டயஸ்போராக்களில் அனேகமானவர்கள் பிரிவினையை எதிர்க்கிறார்கள் - ஜனாதிபதி

புலம் பெயர்ந்தவர்கள் எவ்வித அச்சமும் இன்றி தாராளமாக இலங்கை க்கு வரலாமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தமிழ் டயஸ்போரா அமைப்புக்கள் எல்லாம் பிரிவினைக்காகச் செயற்பட வில்லையென்பதை தான் இலண்டன் சென்றிருந்தபோது நேரடியாக அறிந்து கொண்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இலண்டனில் ஒருசில அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறினார்.

ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றுக்காலை சந்தித்த ஜனாதிபதி இது பற்றி கூறினார். நான் இலண்டன் சென்றிருந்தபோது தமிழ் டயஸ்போரா அமைப்புக்களைச் சேர்ந்த சில பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினேன்.