22112024Fri
Last update:Wed, 20 Nov 2024

சரத் பொன்சேகாவுக்கு அதியுயர் பதவி ; ஜனாதிபதியினால் வழங்கி கௌரவம்

Army2முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகா பீல்ட் மார்ஷலாக தரமுயர்த்தப்பட்டார். முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று மேற்படி பீல்ட் மார்ஷல் பதவி உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கமைய இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முதலாவது பீல்ட் மார்ஷல் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான உத்தியோகபூர்வ.


ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கை வருகை ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்துவதற்காகவே இக்குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தும் என எதிர்பாரக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் உருவாகும் தேசிய அரசில் இனப்பிரச்சினைக்கு தீர்வு சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள் உள்வாங்கப்பட்டதன் பின்பே தேர்தல் முறையில் மாற்றம் - ஜனாதிபதி

President Sirisenaதேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் தேசிய அரசாங்கத்தில் இனப்பிரச்சினை உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். “எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்படு வது உறுதி. தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இது பற்றி கூறியிருக்கிறோம்.

தமிழ் கைதிகளின் விடுதலை பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் சரியான விபரங்கள் சட்டமா திணைக்களத்திடம் ஒப்படைப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முன்னேற்றகரமான பேச்சு இடம்பெற்றுள்ளதாகவும் அவர்களின் எண்ணிக்கை தொடர்பில் இருந்த தெளிவின்மையை சட்ட மா அதிபர் திணைக்களம் சரி செய்துள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் தெரிவித்தார். வடக்கில் தமிழ் மக்களுக்கு கையளிக்கப் பட வேண்டிய காணியை ஒரு மாத காலத்திற்குள் முழுமையாக பெற்றுக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை தெரிவதாகவும் அதற்கான பேச்சுக்கள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் விருது வழங்கும் விழாவில் சிறப்பதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய அவர்.

வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பில் ஆளும், எதிர்க்கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு அவசியம்: டியு.குணசேகர

வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பில் ஆளும், எதிர்க்கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என நாடாளுமன்ற உறுப்பினர் டியு.குணசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் கடந்த காலங்களில் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியது.

இந்த விடயம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தெளிவுபடுத்தினோம்.