15012025Wed
Last update:Tue, 07 Jan 2025

சரத் பொன்சேகாவுக்கு அதியுயர் பதவி ; ஜனாதிபதியினால் வழங்கி கௌரவம்

Army2முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகா பீல்ட் மார்ஷலாக தரமுயர்த்தப்பட்டார். முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று மேற்படி பீல்ட் மார்ஷல் பதவி உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கமைய இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முதலாவது பீல்ட் மார்ஷல் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான உத்தியோகபூர்வ.

 

வைபவம் நேற்று மாலை கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சு மைதானத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் ஸ்ரீபவன், அமைச்சர்கள், முப்படைகளின் தளபதிகள் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

நேற்று மாலை மூன்று மணி தொடக்கம் அதிதிகளின் வருகை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலக்க ஆகியோரின் வருகை இடம்பெற்றது. அதன் பின்னர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. அபேகோன், பி.எம்.யு.டி. பஸ்நாயக்க, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் ஸ்ரீபவன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் வருகை இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகையைத் தொடர்ந்து நிகழ்வுகள் உத்தியோகவூர்வமாக ஆரம்பமானது.

army1ஜனாதிபதி விசேட மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், ஜனாதிபதிக்கான விசேட மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஜெனரல் சரத் பொன்சேகா தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து பிரதான மேடைக்கு அழைத்து வரப்பட்டதுடன் ஜனாதிபதியினால் பீல்ட் மார்ஷலாக தரயமுர்த்தப்படுவதற்கான சான்றுப் பத்திரத்தை பாதுகாப்புச் செயலாளர் பி.எம்.யு.ட. பஸ்நாயக்க வாசித்து பீல்ட் மார்ஷல் பதவி வழங்குவதை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

மேற்படி உத்தியோகபூர்வ அறிவிப்பை தொடர்ந்து பீல்ட் மார்ஷல் பதவிக்கான அடையாளச் சின்னமாக விசேடமாக தயாரிக்கப்பட்ட கோலினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரத் பொன்சேகாவிடம் கையளித்து பீல்ட் மார்ஷலாக தரமுயர்த்தினார். இதனைத் தொடர்ந்து பீல்ட் மார்ஷலுக்கென புதிதாக தயாரிக்கப்பட்ட கொடி ஏற்றபட்டதுடன் விசேட மரியாதை அணிவகுப்பும் இடம்பெற்றது. அதன் பின்னர் ஜனாதிபதி விசேட உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் மைதான வளாகம் இராணுவ சம்பிரதாய முறைக்கமைய தேசியக் கொடி, இராணுவக் கொடி உட்பட முப்படைகளின் வர்ணக் கொடிகள் பறக்கவிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டு காணப்பட்டது.

உலகளாவிய ரீதியில் முப்படைகளின் அதியுயர் தரமாக இந்த பீல்ட் மார்ஷல் பதவி கருதப்படுகின்றது இந்த பதவிக்கு இலங்கையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு வழங்கப்படும் அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். தாய் நாட்டிற்காகவும் தாய் நாட்டின் விடுதலைக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவருக்கே இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் மூன்று தசாப்தங்களாக காணப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதத்திலிருந்து தாய் நாட்டை முற்றாக விடுவிப்பதற்கு இராணுவத்தின் ஊடாக உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தலைமைத்துவத்தை வழங்கியமையை கெளரவிக்கும் வகையிலேயே இந்த தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. அபேகோன், பி.எம்.யு.டி. பஸ்நாயக்க, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் ஸ்ரீபவன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் வருகை இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகையைத் தொடர்ந்து நிகழ்வுகள் உத்தியோகவூர்வமாக ஆரம்பமானது. ஜனாதிபதி விசேட மேடைக்கு அழைத் துச் செல்லப்பட்டதுடன், ஜனாதிபதிக்கான விசேட மரியாதை வழங்கப்பட்டது.

அதன் பின்னர் ஜெனரல் சரத் பொன்சேகா தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து பிரதான மேடைக்கு அழைத்து வரப்பட்டதுடன் ஜனாதிபதி யினால் பீல்ட் மார்ஷலாக தரயமுர்த்தப் படுவதற்கான சான்றுப் பத்திரத்தை பாதுகாப்புச் செயலாளர் பி.எம்.யு.ட. பஸ்நாயக்க வாசித்து பீல்ட் மார்ஷல் பதவி வழங்குவதை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

மேற்படி உத்தியோகபூர்வ அறிவிப்பை தொடர்ந்து பீல்ட் மார்ஷல் பதவிக்கான அடையாளச் சின்னமாக விசேடமாக தயாரிக்கப்பட்ட கோலினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரத் பொன்சேகாவிடம் கையளித்து பீல்ட் மார்ஷலாக தரமுயர்த்தினார். இதனைத் தொடர்ந்து பீல்ட் மார்ஷலுக்கென புதிதாக தயாரிக்கப்பட்ட கொடி ஏற்ற பட்டதுடன் விசேட மரியாதை அணி வகுப்பும் இடம்பெற்றது.

அதன் பின்னர் ஜனாதிபதி விசேட உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் மைதான வளாகம் இராணுவ சம்பிரதாய முறைக்கமைய தேசியக் கொடி, இராணுவக் கொடி உட்பட முப்படைகளின் வர்ணக் கொடிகள் பறக்கவிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டு காணப்பட்டது.

உலகளாவிய ரீதியில் முப்படைகளின் அதியுயர் தரமாக இந்த பீல்ட் மார்ஷல் பதவி கருதப்படுகின்றது இந்த பதவிக்கு இலங்கையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு வழங்கப்படும் அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். தாய் நாட்டிற்காகவும் தாய் நாட்டின் விடுதலைக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவருக்கே இந்த பதவி வழங்கப்ப ட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் மூன்று தசாப்தங்களாக காணப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதத்திலிருந்து தாய் நாட்டை முற்றாக விடுவிப்பதற்கு இராணுவத்தின் ஊடாக உயிர் அச்சுறுத்தல் களுக்கு மத்தியில் தலைமைத்துவத்தை வழங்கியமையை கெளரவிக்கும் வகையி லேயே இந்த தரமுயர்வு வழங்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.