15092024Sun
Last update:Thu, 05 Sep 2024

தனியார் துறையினருக்கு விரைவில் சம்பள உயர்வு

* பாலுக்கு உத்தரவாத விலை

* கூடுதல் நிவாரணங்கள் விரைவில்

* மே முதல் புலமைப் பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு- பிரதமர்

Wickremsinghe IIமஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் 2/3 பெரும்பான்மையுடன் 10 வருடங்களில் நிறைவேற்ற முடியாதவற்றை 88 நாட்களில் மேற்கொள்ள முடிந்தமை இலங்கை அரசியல் வரலாற்றில் தலை சிறந்த சாதனையாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய எஞ்சிய வாக்குறுதி களையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்த அவர், மக்களுக்கு மேலும் நிவாரணங்கள் வழங்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். புதிய அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவித்த அவர் மேலும் கூறியதாவது,


ஐ.நா உதவி செயலாளர் வடக்கிற்கு விஜயம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் உதவி செயலாளர் நாயகமும், ஆசிய மற்றும் பசுபிக் வலயத் தலைவருமான ஹொலிங் ஷு இலங்கை விஜயத்தின் முதற் கட்டமாக வடக்கிற்கு சென்றுள்ளார்.

அதன் முதல் கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார். அந்த வகையில் ஐ.நா அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு, பனங்காமம் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஜீவனோபாய திட்டங்களை அவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

நோர்வே மற்றும் நியூசிலாந்து அரசாங்கத்தின் உதவியுடனும், ஐ.நா அபிவிருத்தித் திட்டத்தின் வழிகாட்டலின் கீழும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு ஜீவனோபாய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி விவசாயம், பண்ணை வளர்ப்பு போன்ற திட்டங்கள் அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

திர்கட்சி தலைவர் தொடர்பில் இன்னும் தீர்மானம் இல்லை

எதிர்க்கட்சித் தலைவர் சர்ச்சை தொடர்பான சபாநாயகரின் தீர்ப்பு நேற்று பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் தனது தீர்ப்பை பிரிதொரு தினத்தில் அறிவிப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பாக தான் ஆழமாக ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்ட அவர் எப்பொழுது தீர்ப்பு வழங்க முடியும் என்று கூற முடியாது எனவும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் காணி உரிமையை உறுதி செய்ய ஆட்சியுரிமை விசேட ஏற்பாடுகள் சட்டம் சபையில்

யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கில் சொந்த காணிகளை இழந்தவர்களுக்கு காணிகளை உரித்துடையதாக்கும் விதத்தில் ஆட்சியுரிமை விசேட ஏற்பாடுகள் சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை - பாகிஸ்தான் 6 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

Signingஇலங்கை - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஆறு ஒப்பந்தங்கள் நேற்று இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.

போதைப்பொருள், சுவாசக்கட்டமைப்பிற்குக் கேடு விளைவிக்கும், அவற்றை உற்பத்தி செய்ய பயன்படுத்தும் மூலப்பொருட்கள் போன்றவற்றை சட்டவிரோதமாக விநியோகம் செய்வதை முழுமையாக நிறுத்துவது உட்பட இரண்டு ஒப்பந்தங்கள் மற்றும் மேலும் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளன.