15092024Sun
Last update:Thu, 05 Sep 2024

கிளிநொச்சி, முல்லை மாவட்டங்களை புனரமைக்க ஐந்தாண்டு சிறப்பு திட்டம்

வடக்கு பிரச்சினைகளை கையாள பிரதமர் செயலகத்தில் விசேட அதிகாரி கிளிநொச்சியில் பிரதமர்

Wickremsinghe IIயுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு விசேட ஐந்தாண்டு திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சியில் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், உட்பட பல்வேறு தரப்பட்ட மக்களையும் பிரதமர் சந்தித்துக் கலந்துரையாடினார்.


யாழில் கா.பொ.த சாதாரண பரீட்சையில் வேம்படி மகளிர் கல்லூரி, இந்துக் கல்லூரி முதலிடம் - அகில இலங்கையில் முதல் பத்து இடங்களைப் பிடித்தவர்கள்...

School girls on the street in Jaffna தற்போது வெளியாகியுள்ள கா.பொ.த சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் வேம்படி மகளிர் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த சா/த பரீட்சையில் யாழ்.வேம்படி வேம்படியில் 246 மாணவர்கள் தோற்றி 243 மாணவர்கள் முழுமையாக அனைத்து பாடங்களிலும் சித்தியடைந்துள்ளனர்.

பிரதமரின் நடவடிக்கைக்கு தமிழ்க் கூட்டமைப்பு வரவேற்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வின் வடக்கு விஜயத்தின் போது பெண்களைத் தலை மையாகக் கொண்ட குடும்ப ங்கள் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர் பான விடயங்களைக் கையாள் வதற்கு வெவ்வேறு செயலகங் களை கிளிநொச்சியில் அமைப்பதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித் துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று கிளிநொச்சிக்குச் சென்றிருந்தபோது, பெண்களைத் தலைமையாகக் கொண்டுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கிளிநொச்சியில் செயலகமொன்றை அமைப் பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

சந்தேக கண்ணோடு பார்க்காதீர்; முன்னாள் புலிகள் கோரிக்கை

சமூகத்தில் இணைக்கப்பட்டு நம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்தும் தம்மை பாரபட்சமாக நடத்த வேண்டாம் என புனர்வாழ்வளிக்கப் பட்ட முன்னாள் போராளிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுக்கொண்டனர்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டு ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் இன்னும் தாம் சந்தேகக் கண்ணோட் டத்திலே பார்க்கப்படுவதாகவும் இராணுவத்தினரின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர்கள் பிரதமரிடம் தெரிவித்தனர்.

உண்மையான நல்லிணக்கமே எமது இலக்கு

தேசிய கீதம் தமிழில் பாடுவதை ஊக்குவிப்போம்

சந்திரிகா தலைமையில் தேசிய ஐக்கியத்திற்கான தலைமையகம் உருவாக்கம்

WICKREMESINGHEநாட்டில் எந்தப் பகுதியிலும் பயங்கரவாதம் மீள உருவாகு வதற்கு இடமளிக்கப் போவதில்லையெனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் நல்லிணக்க செயற்பாடுகளை வலுப்படுத்தவுள்ளதாகவும் கூறினார். பத்திரிகை ஆசிரியர்கள் இலத்திரணியல் ஊடக முக்கியஸ்தர்களை நேற்று அலரிமாளிகையில் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் மக்கள் மத்தியில் நல்லிணக்கம் இருந்தால்தான் அரசாங்கத்தை உறுதியுடன் கொண்டு செல்ல முடியும். இதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் தேசிய ஐக்கியத்திற்கான தலைமையகம் ஒன்று உருவாக்கப்படும் எனவும் பிரதமர் கூறினார்.