15012025Wed
Last update:Tue, 07 Jan 2025

யாழில் கா.பொ.த சாதாரண பரீட்சையில் வேம்படி மகளிர் கல்லூரி, இந்துக் கல்லூரி முதலிடம் - அகில இலங்கையில் முதல் பத்து இடங்களைப் பிடித்தவர்கள்...

School girls on the street in Jaffna தற்போது வெளியாகியுள்ள கா.பொ.த சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் வேம்படி மகளிர் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த சா/த பரீட்சையில் யாழ்.வேம்படி வேம்படியில் 246 மாணவர்கள் தோற்றி 243 மாணவர்கள் முழுமையாக அனைத்து பாடங்களிலும் சித்தியடைந்துள்ளனர்.

இதில் 28 மாணவர்கள் 9ஏ சித்தியையும் குறிப்பாக 11 மாணவர்கள் ஆங்கில மொழிமூலம் 9ஏ சித்தியையும், 17 மாணவர்கள் தமிழ் மொழிமூலம் 9ஏ சித்தியையும் பெற்றுள்ளனர்.

மேலும் யாழ்.இந்துக்கல்லூரியை பொறுத்த வரையில் க.பொ.த சாஃத பரீட்சையில் தோற்றிய 263 பேரும் முழுமையாக சித்தியெய்தியுள்ளனர்.

மேலும் இதில் 18 மாணவர்கள் 9ஏ சித்தியையும் குறிப்பாக 8 மாணவர்கள் தமிழ்மொழியிலும்,10 மாணவர்கள் ஆங்கிலமொழியிலும் 9ஏ சித்தியையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை யாழ்.இந்துக் கல்லூரி யாழ்.மாவட்டத்தில் ஆண்கள் பாடசாலையில் முன்னிலை வகிக்கும் அதேவேளை பெண்கள் பாடசாலையில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை முதலிடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கையில் முதல் பத்து இடங்களைப் பிடித்தவர்கள்

நடந்து முடிந்த 2014 க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் கொழும்பு நாலந்தா கல்லூரியைச் சேர்ந்த தரிந்து நிர்மல் என்ற மாணவன் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

கம்பஹா ஹொலி குரோஸ் கல்லூரியைச் சேர்ந்த சந்தினி நவரஞ்சன அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

விசாக்கா கல்லூரியைச் சேர்ந்த அமாலி நிவரத்தன மற்றும் கண்டி மஹாமாயா கல்லூரியைச் சேர்ந்த எச்.அபேசிங்க, ரத்னாவலி மகளிர் மகா வித்தியாலய மாணவி நுவனி நெத்சரனி ஆகியோர் அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

ஏனைய மாணவர்கள் விபரம் வருமாறு

04.தேவினி ருவன்கா ஹேமசிங்க - விசாகா மகளிர் மகா வித்தியாலயம் 
05.
திவ்யாஞ்சலி உத்தரா ராஜபக்ஷ - தேவி பாலிகா மகா வித்தியாலயம்
06.
ரன்சிக லசன் குணசேகர - தேர்ஷ்டன் கல்லூரி 
06.
திலினி சந்துனிகா பரிஹக்கார - சுஜதா கல்லூரி - மாத்தறை 
06.
அஞ்சன ரெவிரங்க அபயதீப மதரசிங்க - மொரவக்க கீர்த்தி அபேவிக்ரம மத்திய மகா வித்தியாலயம்.