23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

மீரியபெத்த: ஜனவரியில் வீடுகள்

tkn 11 03 nt 06 mglமீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மகுல்தெனிய பகுதியில் 75 வீடுகள் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் இந்த பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் வழங்க இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

மீரியபெத்த மண்சரிவு இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தியாகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த அமைச்சர், வீடுகள் நிர்மாணிக்கும் பணிகளை துரிதப்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டார். அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று நடைபெற் விசேட ஊடகவிய லாளர் மாநாட்டில் அமைச்சர் இது குறித்து கருத்து வெளியிட்டார்.

வீடுகள் நிர்மாணிக்கும் இடம் மாற்றப் பட்டமை காலநிலை, கட்டட ஆய்வு நிறுவன அனுமதி பெறல் என்பன காரணமாக வீடுகள் நிர்மாணிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக கூறிய அமைச்சர் மகுல்தெ னியவில் 51 வீடுகளும் அதற்கு அருகிலுள்ள பெருந்தோட்ட காணியில் 15 வீடுகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்படுவதாக குறிப்பிட்டார். மீரியாபத்தவிற்கு அருகில் மண்சரிவு அபாயமிருப்பதாக அடையாளங் காணப்பட்டுள்ள 12 குடும்பங்களும் இதனோடு சேர்த்து வீடுகள் நிர்மாணிக்கப் படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மீரியபெத்த பகுதியில் மண்சரிவு அபாயம் இருப்பது குறித்து 2005 குலே அறிவுறுத்தப்பட்டது. இதன்படி 40 குடும் பங்களுக்கு வேறு இடங்களில் வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட்டன. ஆனால் அந்த மக்கள் அங்கிருந்து செல்லவில்லை. மக்களை பலாத்காரமாக வெளியேற்றும் அதிகாரம் எமது அமைச்சிற்கு கிடையாது.

ஒரு வருடமாகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. 2015 மே மாதமே மீரியபெத்த குறித்த கண்காணிப்பு பொறுப்பு எமது அமைச்சிற்கு வழங்கப்பட்டது. இரு வாரங்களுக்கு முன்னர் அமைச்சின் செயலாளர் அடங்கலான குழுவினர் அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர்.

100 நாள் திட்டத்தின் கீழ் ஏற்கனவே திட்டமிட்ட இடம்மாற்றப்பட்டது. புதிய இடத்தில் 51 வீடுகளே கட்ட முடியும். 15 வீடுகள் அதற்கு அருகில் உள்ள பெருந்தோட்ட காணியில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக குறித்த பெருந்தோட்டக் கம்பனி நேற்று (2) தனது அனுமதியை வழங்கியது.

மணல், கட்டிடப் பொருட்கள் என்பவற்றை எடுத்துச் செல்வது, நிலத்தை கட்டிட ஆய்வு நிறுவன பரிந்துரைகளுக் கமைய தயார் செய்வது, பாதை சீர்கேடு, காலநிலை என்பன காரணமாகவும் வீடுகள் நிர்மாணிப்பதில் தாமதம் ஏற்பட்டது. வீடுகள் நிர்மாணிக்க 90 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. எமது அமைச்சு தேவையான மேற்பார்வை பணிகளை மேற்கொள்கிறது.

இராணுவம் வீடுகளை நிர்மாணித்து வருகிறது. நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் வீடுகள் கட்டும் பணிகள் பூர்த்தி செய்யப் பட்டு மக்களுக்கு கையளிக்கப்படும் என்றார்.