17072024Wed
Last update:Wed, 08 May 2024

தாக்கியமை தொடர்பில் ஆராய மூவரடங்கிய குழு

hnda protestகொழும்பு, வாட் பிளேசிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, உயர் தேசிய தொழில்நுட்ப டிப்ளோமா பாடநெறி (HNDA) மாணவர்களை தாக்கியமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவர் அடங்கிய சுயாதீன குழுவொன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சிறி ஹெட்டிகே இன்று (02) தெரிவித்துள்ளார்.

பதில் பொலிஸ் மாஅதிபர், பூஜித் ஜயசுந்தர, மேல் மாகாண உதவிப் பொலிஸ் மா அதிபர் காமினி மதுரட்ட, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தம்மிக சிறிவர்தன உள்ளிட்ட அதிகாரிகள், பொலிஸ் ஆணைக்குழுவில் இன்று (02) மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இச்சம்பவம் குறித்து, செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் அழைத்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக ஹெட்டிகே தெரிவித்தார். தேவையேற்படின், பொலிஸ் மாஅதிபரையும் ஆணைக்குழுவிற்கு அழைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த அறிக்கையை, இரு வாரங்களுக்குள் எதிர்பார்ப்பதாகவும் பொலிஸ் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் சிறி ஹெட்டிகே தெரிவித்தார்.