ஜேர்மன் வெளிநாட்டு அமைச்சர் - ஜனாதிபதி மைத்திரிபால சந்திப்பு
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜேர்மன் வெளிநாட்டு அமைச்சர் ப்ரேங்க் வோல்டர் ஸ்டெய்ன்மியர் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடி போது... (படம் : சுதத் சில்வா)
இந்திய மீனவர்கள் 15 பேரை காங் கேசன்துறை கடற்படையினர் கைதுசெய்து யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
இலங்கை அரசாங்கம் செப்டெம்பர் 21 முதல் 27ஆம் திகதி வரை சமுத்திர மற்றும் கடல்சார் வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இவ்வாரத்தின் அங்குரார்ப்பணத்தை குறிக்குமுகமாக ஒரு நினைவுச் சின்னம் ஜனாதிபதி மைத்ரிபல சிறிசேன அவர்களுக்கு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இன்று (21) கையளிக்கப்பட்டது.
இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இறந்தவர்கள் குறித்து ஐ.நா. குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள எண்ணிகையை, காணாமல் போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம நிராகரித்துள்ளார்.
புதிதாக நியமனம் பெற்றுள்ள அமைச்ரவையில், ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் அடங்கிய வர்த்தமானி இன்று (22) வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகம் தெரிவித்துள்ளது.