பாராளுமன்ற அமர்வு இன்று முதல் ரூபவாஹினியில் நேரடி ஒளிபரப்பு
பாராளுமன்ற விவாதங்கள் இன்று முதல் தேசிய ரூபவாஹினி ஊடாக நேரடி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக நேற்றையதினம் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற விவகாரம் தொடர்பான தெரிவுக்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு தாய் பெற்றெடுக்கும் குழந்தையை உண்மையான மனிதனாக்க ஒரு ஆசிரியரால் முடியும் அதேவேளை அந்தக் குழந்தையை தத்துவவாதியாக, அறிஞராக, கலைஞனாக, அரசியல்வாதியாக, மக்கள் தலைவனாக ஆக்குவதற்கான இடமாக இருப்பது பாடசாலையாகும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
ஜப்பானுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (07) காலை ஜப்பான் பேரரசர் மற்றும் பேரரசியைச் சந்தித்தார்.
நேற்று (06) மாலை வேளையில் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தடம் விலகியதால் தடைப்பட்டிருந்த வடக்கு ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது.
வடமாகாணத்தின் தீவு பகுதிகளிலுள்ள மக்களின் நலனை கருத்திற்கொண்டு கடற்படையினரால் சகல வசதிகளையும் கொண்ட அம்பியுலன்ஸ் படகொன்று கையளிக்கப்பட்டது.