வடமாகாணத்தின் தீவு பகுதிகளிலுள்ள மக்களின் நலனை கருத்திற்கொண்டு கடற்படையினரால் சகல வசதிகளையும் கொண்ட அம்பியுலன்ஸ் படகொன்று கையளிக்கப்பட்டது.
வடமாகாண ஆளுநர் எச். எம். ஜி.எஸ் பலிஹக்காரவின் வேண்டுகோளுக்கிணங்க தயாரிக்கப்பட்ட இந்த அம்பியுலன்ஸ் படகு நேற்று (05) கிளிநொச்சியில் வைத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. பின்னர் ஜனாதிபதி அதனை வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி எஸ். ஆர். ஜூட்டிடம் கையளித்தார்.
இலங்கை கடற்படையினால் சுமார் 3 கோடி 70 இலட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட மேற்படி அம்பியுலன்ஸ் படகை வடமாகாண ஆளுநரின் சார்பில் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி எஸ். ஆர். ஜூட் ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
தீவு பகுதிகளிலுள்ள மக்கள் மருத்துவ தேவைக் கருதி மேலதிக,அவசர சிகிச்சைகளுக்காக அவசர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் பிரதான வைத்தியசாலைகளுக்கு மாற்றம் செய்யும் வகையில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டலில் இந்த படகு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அம்பியுலன்ஸ் படகு வெலிசரயிலுள்ள இலங்கை கடற்படையின் கரையோர ரோந்து படகு நிர்மாண திட்ட பிரிவினரால் தயாரிக்கப்பட்ட இந்த படகில் பதினைந்து நோயாளிகளை கொண்டுச் செல்ல முடியும்.
மூன்று மருத்துவ படுக்கைகள், இரண்டு ஒட்சிசன் சிலிண்டர்கள், நோயாளிகளை கண்காணிப்பு செய்யும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் மேலும் தேவையான பொருட்களும் இந்த படகில் காணப்படுகின்றன.
நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அம்பியுலன்ஸ் படகு நெடுந்தீவு இறங்கு துறையிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை மேற்படி படகு கையளிக்கும் நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, வட மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சமூக சேவைகள், புனர்வாழ்வு, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.