25102025Sat
Last update:Fri, 10 Oct 2025

ஜப்பான் பேரரசருடன் பிரதமர் சந்திப்பு

pm meets japan king queen 3ஜப்பானுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (07) காலை ஜப்பான் பேரரசர் மற்றும் பேரரசியைச் சந்தித்தார்.

டோக்கியோ நகரில் உள்ள இம்பீரியல் மாளிகையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இச்சந்திப்பில் பிரதமரின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.