23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

பாராளுமன்ற அமர்வு இன்று முதல் ரூபவாஹினியில் நேரடி ஒளிபரப்பு

SriLankan ParliamentIIIபாராளுமன்ற விவாதங்கள் இன்று முதல் தேசிய ரூபவாஹினி ஊடாக நேரடி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக நேற்றையதினம் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற விவகாரம் தொடர்பான தெரிவுக்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சில காலம் பாராளுமன்ற அமர்வுகள் இணையத்தளம் ஊடாக 'பியோ' தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பப் பட்டிருந்தது. எம்.பிக்கள் சிலரது ஆட்சேபனையை அடுத்து கடந்த சில மாதங்களாகநேரடி ஒளிபரப்பு இடைநிறுத்தப்பட் டிருந்தது. இந்த நிலையில் ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு எம்பிக்கள் பலரது வேண் டுகோளையடுத்து பாராளுமன்ற அமர் வுகளை நேரடியாக ஒளிபரப்புச் செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது.

 இதன்பிர காரம் இன்று வியாழக்கிழமை முதல் பாராளுமன்றத்தின் முதல் இரண்டு மணித்தியால அமர்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்படும். இதற்கமைய பிற்பகல் 1 மணிமுதல் 3 மணிவரையான சபை நடவடிக்கைகளை ரூபவாஹினி தொலைக் காட்சி ஊடாக நேரடியாக பார்க்க முடி யும்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சு உரிமைக்கு அநீதி ஏற்பட இடமளிக்கப் போவதில்லையென்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. 23/2 நிலையியற் கட்டளையின் கீழான கேள்வி நேரம் முடிவடைந்த பின்னர் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய விமல் வீரவன்ச, தங்களுக்கு கட்சித் தலைவர் களுக்குரிய அங்கீகாரம் வழங்கப்படாதது குறித்து கேள்வியெழுப்பினார். இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆறு கட்சிகளின் தலைவர்களை மாத் திரமே கட்சித் தலைவர்களாக அங்கீகரிக்க முடியும் என்றும் ஏனைய கட்சித் தலை வர்களை அவ்வாறு அங்கீகரிக்க முடி யாது என்றும் சபை முதல்வர் அமை ச்சர் லக்ஷ்மன் கிரியல்ல கூறினார். இந்தக் கூற்றுக்கு எதிராக எதிர்த்தரப்பினர் கோஷம் எழுப்பியதோடு ஆளும் தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளியிட் டனர்.

இதனால் சபையில் குழப்பநிலை ஏற்பட்டது. ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய விமல் வீரவன்ச எம். பி, பாராளுமன்றத்தில் ஆசன ஒதுக்கீடு, கட்சித் தலைவர்கள் கூட்டம், அமைச் சுக்கள் தொடர்பான குழுக்களில் எம் பிக்களின் பங்களிப்பு என்பன தொடர் பில் பிரச்சினையுள்ளது.

2004 பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.முவுடன் இணை ந்து போட்டியிட்ட ஜே.வி.பி அரசாங் கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற் பட்டபோது அந்தக் கட்சியை பாராளு மன்றம் தனிக்கட்சியாக அங்கீகரித் திருந்தது.

ஐ.ம.சு.முவில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சிகளுக்கும் உரிய அங்கீகாரம் வழங்குமாறு உங்களிடம் இரண்டு தட வைகளுக்கு மேல் வேண்டுகோள் விடுத் திருக்கிறேன். ஆனால் இதுவரை எந்த முடிவும் வழங்கப்படவில்லை. இந்த விவகாரத்தைத் தொடர்ந்தும் இழுத் தடிக்காமல் துரிதமாக சபாநாயகரின் தீர்ப்பை வழங்குமாறு கோருவதாகவும் கூறினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சபை முதல்வர், அமைச்சர் லக்ஷ்மன் கிரி யல்ல ஆறு கட்சிகளை மாத்திரமே இந் தப் பாராளுமன்றம் அங்கீகரித்துள்ளது. சபாநாயகர் கூட ஆறு கட்சிகளின் தலை வர்களையே கட்சித் தலைவர்களாக அங்கீகரித்திருக்கிறார்.

சுதந்திரக் கட்சியில் தொங்கிக்கொண்டு வந்த கட்சிகளை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்க முடியாது. இந்தப் பிரச்சினை குறித்து தொடர்ந்தும் பேசுவதற்கு இடமளிக்க முடியாது. ஒரு கட்சிக்குள் இருக்கும் வேறு கட்சிகளை அங்கீகரிக்க முடியாது என்றார்.

வாசுதேவ நாணயக்கார கருத்துத் தெரிவிக்கையில், கடந்த ஆட்சியிலும் நாம் தனியான கட்சிகளாகவே ஆளும் தரப்பில் அங்கம் வகித்திருந்தோம். அதன் பிரகாரமே பாராளுமன்றத்தில் உரையாற்ற எமக்கு நேரம் ஒதுக்கப்பட்டது என்றார்.

இதன்போது கருத்து வெளியிட்ட தினேஷ் குணவர்த்தன கூறுகையில், இதற்கு முன்பிருந்த சபாநாயகர்கள் ஐ.ம.சு.வில் அங்கம் வகிக்கும் கட்சிகளை பாராளுமன்றத்தில் அங்கீகரித்திருந்தார்கள்.

எம்பிக்களின் வாயை மூடவைத்து அவர்களின் பேச்சுரிமையைத் தடுக்கமுடி யாது. இந்த விவகாரம் தொடர்பில் சபாநாயகரின் பக்கச்சார்பற்ற தீர்ப்பை எதிர்பார்க்கின்றோம். உண்மையான எதிர்க்கட்சியை மெளனமாக்க முயற்சி நடைபெறுகிறது. பாராளுமன்றத்தில் உள்ள சகல கட்சிகளையும் அரசியல் கட் சிகளாக பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் அவர் எழுத்துமூலமும் அறிவித்திருக்கிறார் என்றார்.

இந்த சர்ச்சையில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், கடந்த பாராளுமன்றத்தில் எனக்கும் இந்தப் பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிட்டது. நாம் ஐ.தே.க பங்காளிக் கட்சியாகப் போட்டியிட்டு பாராளுமன்றம் தெரிவாகி யிருந்த நிலையில் என்னை கட்சித் தலைவராக அங்கீகரிக்க அன்று ஆளும் தரப்பு பிரதம கொரடாவாகவிருந்த தினேஷ் குணவர்த்தன இடமளிக்க வில்லை என்றார்.

சந்திரசிறி கஜதீர எம். பி கருத்து வெளியிடுகையில், இந்த அரசாங்கம் சகல கட்சிகளையும் ஒத்துழைக்கக் கோருகிறது. இரண்டு கட்சிகள் மாத்திரம் இணைவதன் ஊடாக மட்டும் நல்லாட் சியை ஏற்படுத்த முடியாது. சகல தரப் பினரதும் ஒத்துழைப்பை பெறும் வகையில் இந்தப் பிரச்சினைக்கு பக்கச்சார்பற்ற தீர்ப்பொன்றை வழங்குமாறு கோருகிறேன் என்றார்.

இரு தரப்பினதும் வாதப்பிரதிவாதங்க ளைச் செவிமடுத்த சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த விவகாரம் தொடர்பாக முதலாவது கட்சித் தலைவர் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. சில காரணங்களின் அடிப்படையிலேயே கடந்த காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் எழும்போது முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

கட்சித் தலைவர்களின் கருத்துக்களையும் இந்தப் பிரச்சினையுடன் தொடர்புபட்ட கட்சிகளின் அபிப்பிராயங்களையும் பெற்று இந்த வாரத்துக்குள் எனது தீர்ப்பை அறிவிப்பேன். எக்காரணம் கொண்டும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சு உரிமைக்கு இடையூறு ஏற்படுத்த இடமளிக்க மாட்டேன் என்றார்.