ஜெனீவா குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க நல்ல அவகாசம்
ஜெனீவா பிரேரணை மூலம் எமக் கெதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங் குவதற்கு அவகாசம் ஏற்பட்டிருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். யுத்தத்தை சட்டபூர்வமாக நடத்தியதால் தான் விசாரணைகளுக்கு அஞ்சவில்லை என்று தெரிவித்த அவர் யுத்தத்தில் முன் னாள் பாதுகாப்பு செயலாளர் உத்தரவுகள் வழங்கியிருந்தால் அது சட்டவிரோதமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் கண்காணிப்பின்கீழ் ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் குறித்த அமைச்சர்களின் தலைமையில் தேசிய மட்டத்தில் தொழிற்சங்க ஆலோசனை சபையை அமைப்பதற்கு ஜனாதிபதி அனுமதியளித்துள்ளார்.
அரசு இதுவரை பொறுப்புடன் பதில் கூறவில்லை - சுமந்திரன் எம்.பி
'வெலே சுதா' என அழைக்கப்படும், கம்பள விதானகே சமன்த குமாரவிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரத் துறைக்காக ஒதுக்கப்படும் நிதி அடுத்த வரவு செலவு திட்டத்தில் மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.