23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

தமிழ் கைதிகளின் உடல் நிலை பாதிப்பு

prison 1அரசு இதுவரை பொறுப்புடன் பதில் கூறவில்லை - சுமந்திரன் எம்.பி

தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக நேற்றுத் தொடர்ந்தது. உண்ணாவிரதமிருந்த நான்கு கைதிகளின் உடல்நிலை மோசமடைந்ததால் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

 உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் கோரிக்கை ஜனாதிபதியின் செயலாளர், சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு அனுப்பிவைக்கப் பட்டிருப்பதுடன், சட்டம் ஒழுங்கு அமைச்சர் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவிருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோஹண புஷ்பகுமார தெரிவித்தார்.

அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு கைதி மயக்கமுற்றதுடன், மகசின் சிறைச்சாலையில் மேலும் மூவர் மயக்கமுற்று சிறைச்சாலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் அம்பலவன்பொக்க னையைச் சேர்ந்த 44 வயதுடைய கந்தசாமி விஜயகுமார் என்ற கைதியே அநுராதபுரம் சிறைச்சாலையில் மயக்கமுற்றார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தம்மை ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி நாடு முழுவதிலுமுள்ள 14 சிறைச்சாலைகளில் 237 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். நேற்றுமுன்தினம் ஆரம்பமான இந்தப் போராட்டம் நேற்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது. கைதிகளின் உடல்நிலை காரணமாக அநுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று மன்னார் மற்றும் வவுனியா நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லப் படவிருந்த கைதிகள் அழைத்துச் செல்லப்படவில்லை.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பான பெயர் விபரங்கள், சிறையில் தடுத்துவைக்கப் பட்டுள்ள காலம், வழக்கு விபரம் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட் டுள்ளன. ஜனாதிபதிக்கு வழங்கும் நோக்கில் விபரங்கள் சேகரிக்கப்படுவ தாக சிறைச்சாலை அதிகாரிகள் கூறி யுள்ளனர்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நேற்றையதினம் இரண்டாவது நாளாக மகசின் சிறைச்சாலைக்குச் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளைச் சந்தித்திருந் தார். இது விடயம் தொடர்பில் அவர்கள் வழங்கிய கோரிக்கைக் கடிதம் ஜனாதி பதி, சட்டம் ஒழுங்கு அமைச்சர் உள் ளிட்டவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட் டுள்ளது. இது தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவார் என சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்றையதினம் மகசின் சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளைப் பார்வையிட்டிருப்பதுடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் குமாரவும் கைதிகளைப் பார்வையிட் டுள்ளார்.

அதேவேளை, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் வடமாகாணசபை உறுப்பினர்கள் நல்லூர் கந்தசாமி ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், வடமாகாணசபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா உள்ளிட்ட மாகாணசபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

சுமந்திரன் எம்.பி.

இதேவேளை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் அரசாங்கம் இன்னமும் எந்தவித உறுதியான பதிலையும் வழங்கவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத் தின் கவனத்துக்குக் கொண்டு சென் றுள்ளபோதும், இதுவரை அரசாங்கத்திட மிருந்து உறுதியான பதில் கிடைக்க வில்லையென அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நீதிய மைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருந்தார். கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துமாறு அவர் வலியுறுத்தி யிருந்ததாக சுமந்திரன் தெரிவித்தார்.

அதேநேரம், உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல் கைதிகளை நேரில்சென்று பார்வையிட விருப்பதாகவும், முதலில் இன்று காலை அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் செல்லவிருப்பதாகவும் சுமந்திரன் எம்பி கூறினார்.

தொடர்ந்தும் கஷ்டப்பட அனுமதிக்க முடியாது. இதேவேளை, தமது விடு தலைக்காகப் போராடிவரும் தமிழ் சிறைக்கைதிகளுக்கு மக்கள் ஆதரவைத் திரட்டிப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

ஏற்கனவே சிறைச்சாலைகளில் கஷ்டப்படும் அவர்கள் உண்ணாவிரதமி ருந்து மேலும் கஷ்டங்களுக்கு உள்ளாவதை அனுமதிக்க முடியாது. இது விடயத்தில் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுப் பதுடன் அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதே தமது உறுதியான கோரிக்கை என்றும் அவர் கூறினார்.