ஜெனீவா பிரேரணை மூலம் எமக் கெதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங் குவதற்கு அவகாசம் ஏற்பட்டிருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். யுத்தத்தை சட்டபூர்வமாக நடத்தியதால் தான் விசாரணைகளுக்கு அஞ்சவில்லை என்று தெரிவித்த அவர் யுத்தத்தில் முன் னாள் பாதுகாப்பு செயலாளர் உத்தரவுகள் வழங்கியிருந்தால் அது சட்டவிரோதமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனநாயக கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று கருத்துத் தெரிவித்த அவர்,
ஜெனீவாவுக்கு யாருக்கும் சென்று குற்றச்சாட்டுகள் முன் வைக்க முடியும். முன்னாள் ஜனாதிபதி கூட அங்கு சென் றிருக்கிறார். எமக்கெதிரான குற்றச்சாட் டுகளுக்கு பதில் வழங்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. யுத்தத்திற்கே தாமே உத்தரவு வழங்கியதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் யுத்தத்தில் அதிக பங்களிப்பு செய் தது நானே.
தேவையான உத்தரவு கள் மாற்றங்கள், பயிற்சிகள், திட் டமிடல்கள் என்பவற்றை மேற் கொண்டேன் உலக சம்பிரதாயங்களு க்கு அமைவாக யுத்தத்தை சட்ட பூர்வமாக முன்னெடுத்தேன். யுத் தத்தை வேறு யாராவது வழிநடத் தியதாக கூறினால் அது சட்டவிரோத மான செயலாகும் பாதுகாப்பு செயலா ளருக்கு இராணுவத்தினருக்கு பணிப்புரை வழங்க முடியாது. தான் உத்தரவு வழங் கியதாக பாதுகாப்பு செயலாளர் கூறியிருந் தால் அது சட்ட விரோதமான செயலாகும்.