அரசியலமைப்பை மறுசீரமைக் உகந்த சூழ்நிலை
காலத்தை வீணடிக்காமல் வேலைத் திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும்
இலங்கை அரசியலமைப்பை மறு சீரமைப்பதற்குரிய உகந்த அரசியல் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளமை யால் காலத்தை வீணடிக்காமல் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் டொக்டர் ஜயம்பதி விக்கிரமரட்ன நேற்று தெரிவித்தார்.
ணீலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல ஆதி பராசக்தி அம்பிகைக்குரிய நவராத்திரி முடிந்து பத்தாம் நாள் வருகின்ற இனிய நன்னாள் விஜயதசமி வெற்றித்திருநாள் இன்றாகும். வழிபடும் அடியார் பெருமக்களின் அல்லல் போக்கி, இன்னல் நீக்கி, துன்பம் விலக்கி அருள் செய்யும் அம்பிகைக்குரிய பொன்னாள் தான் இன்றைய விஜயதசமி நன்னாள்.
சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2015 அரச இலக்கிய விருது விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் தாமரைத் தடாக மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதன் போது 2014ம் ஆண்டில் சிறந்த தமிழ், சிங்கள, ஆங்கில நூல்களுக்கு விருது வழங்கப்பட்டது.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று நவராத்திரி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நடந்த இந்த வழிபாடுகளின் போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர்களான விஜயகலா மகேஸ்வரன், வீ. இராதாகிருஷ்ணன் உட்பட அமைச்சர்கள் எம்.பிக்கள் கலந்துகொண்டிருப்பதைப் படத்தில் காணலாம்.