20042025Sun
Last update:Tue, 07 Jan 2025

கனடா தேர்தல்: ஆனந்த சங்கரியின் மகன் வெற்றி - ராதிகா தோல்வி

1265184891Untitled 1கனடாவின் பாராளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட கெரி ஆனந்தசங்கரி வெற்றியீட்டியுள்ளார்.

 இலங்கை அரசியல்வாதியான ஆனந்த சங்கரியின் புதல்வரான கெரி, தனது 10 வயதில் 1983ம் ஆண்டு கனடாவிற்கு சென்றவர்.

பல தமிழ் அமைப்புக்களில் உயர் பதவிகளை வகித்ததுடன், இளைஞர்கள் கலாச்சார பிரழ்வால் வழிதவறிச் செல்லாமல் அவர்களிற்காக உதவும் அமைப்பை ஸ்தாபித்து தமிழ் இளைஞர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். உலகின் தமிழ் தலைவர்களின் மதிப்பைப் பெற்றவர்.

இதேவேளை புதிய சனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன், இந்தத் தேர்தலில் சில ஆயிரம் வாக்குகளால் தோல்வியைத் தழுவியுள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று புலம்பெயர்ந்த தேசங்களில் முதலாவது தமிழ் பாராளுமன்ற என்ற பெருமையைப் பெற்றவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவின் தேர்தலில் எதிர்கட்சியாக இருந்த லிபரல் கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.