23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

உள்ளகப் பொறிமுறைக்கு ஜப்பான் உச்ச அளவில் உதவும்

tkn 10 06 rm 10 cjpஐ.நா.வின் இலங்கை பிரேரணை:

ஐ.நா. சபையின் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர் பாக சமர்ப்பிக் கப்பட்டுள்ள பிரேரணைக்கு உள்ளூர் பொறி முறை ஊடாக பதிலளிக்க இலங்கை அரசுக்கு உச்ச ஒத்துழைப்பை வழங்குவதாக ஜப்பான் தெரிவித் துள்ளது. ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவிடம் இதனை தெரிவித்துள்ளார்.

சீர்குலைந்த உள்நாட்டு சர்வதேச நம்பிக்கை மீண்டும் கட்டியெழுப்புவதற் காக தற்போதைய அரசு மேற்கொள்ளும் முயற்சிக்கு தமது அரசு பாராட்டு தெரிவிக்கிறது.

புதிய நல்லாட்சி அரசு புதிய நாட்டை உருவாக்க மேற்கொள்ளும் முயற்சிக்கு ஜப்பான் நெருங்கிய நண்பராக ஆற்றக்கூடிய சகல உதவிகளையும் வழங்குமென்றும் ஜப்பான் அமைச்சர் கூறினார்.

முன்னைய தசாப்தத்தைப் போலன்றி இலங்கை அரசு நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையை கடைப் பிடிக்கின்றமை தொடர்பாகவும் அவர் பிரதமருக்கு பாராட்டுத் தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் மூலமாக தொடர்புகள் மேலும் பலமுறும். அபிவிருத்தி, தொழில்நுட்பம், அறிவூட்டல் கூடிய உதவிகளை இலங்கைக்கு வழங்க ஒருபோதும் ஜப்பான் பின்நிற்காது.

அரசு, தனியார் துறை முதலீடுகளுக்காக இலங்கையில் சிறந்த சூழலை உருவாக்க தற்போதைய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பாக ஜப்பான் உன்னிப்பாக அவதானிக்கிறது.

இலங்கை மீண்டும் எழுந்து நிற்க நெருங்கிய நட்பு நாடு என்ற வகையில் நாம் கைகொடுப்போம் என ஜப்பானிய அமைச்சர் கூறினார்.

சுதந்திரத்துக்குப் பின் இலங்கையுடன் முதலில் தொடர்புகளை 05 நாடுகள் ஏற்படுத்தின. இந்தியா, பாகிஸ்தான், பர்மா (மியன்மார்), தாய்லாந்து, ஜப்பான் ஆகியவையே அவை. ஜே.ஆர். ஜெயவர்தனா இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகளை ஏற்படுத்த அடிப்படையாக விளங்கினார். பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் அந்த நிலைமையை முன்னெடுத்தனர் என்றும் ஜப்பான் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது பிரதமர் ரணில் கூறிய தாவது, ஆறு தசாப்தங்களுக்கும் பின் னர் இரு பிரதான அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து இலங்கையில் தேசிய அரசை அமைத்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான எமது அரசு நல்லாட்சி, ஜனநாயகம், மனித உரிமையைப் பலப்படுத்தி நாட்டை முன்கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளது.

வலய, பிராந்திய சமாதானம், அபிவிருத்தி தொடர்பாக நாம் அர்ப்பணம் பூண்டுள்ளோம். அங்கு ஆசிய பசுபிக் வலய நாடுகளில் அமைதி, அபிவிருத்தியை கொண்டு செல்ல ஜப்பானின் பங்களிப்பு முக்கியமாகும்.

ஐ.நா. அமைப்பின் பாதுகாப்பு சபையில் ஆசியாவின் பிரதிநிதித்துவம் போதாதென்பதே எமது என்னப்பாடாகும். அங்கு பிரதிநிதி ஆசனம் ஒன்றையும் பெற்றுக் கொள்வதற்காக ஜப்பானுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க இலங்கை நடவடிக்கை எடுக்குமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, சுசில் பிரேமஜயந்த, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜப்பானிலுள்ள தூதுவர் பேராசிரியர் தம்மிக கங்கநாத் திசாநாயக்க, பிரதமரின் மேலதிக செயலர் சமன் அதாவுத ஹெட்டி, பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் மொன்டி காசிம், தேசிய கொள்கை பொருளாதார விவகார அமைச்சின் ஆலோசகர் ஆர். பாஸ்கரலிங்கம், இலங்கையிலுள்ள ஜப்பான் தூதுவர் கெனிசி சுகனுமா, ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஹகியோ யமதா, பணிப்பாளர் தகஹி அரியொஷி ஆகியோரும் இதில் பங்கு கொண்டனர்.