நேற்று (06) மாலை வேளையில் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தடம் விலகியதால் தடைப்பட்டிருந்த வடக்கு ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது.
குறித்த ரயிலின் தடம் விலகிய இரண்டு பெட்டிகளும் தண்டவாளத்தில் மீள ஒழுங்கமைக்கப்பட்டு, தடம் விலகியதால் சேதமடைந்த ரயில் ஓடு பாதை மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் தலைமன்னார் நோக்கி கொழும்பு கோட்டையிலிருந்து நேற்றிரவு புறப்படவிருந்த இரவுநேர தபால் ரயில்கள் இடைநிறுத்தப்பட்டிருந்ததோடு.
காங்கேசன்துறை நோக்கிச் சென்ற கடுகதி ரயில் இன்று (07) காலை 5.45 க்கு வழமைபோன்று புறப்பட்டுச் சென்றதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.