ஐ. நா. 70வது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி
ஐக்கிய நாடுகள் சபையின் 70வது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள அரச தலைவர்களுக்கு நேற்று முன்தினம் (28) ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மதிய போசன விருந்தளித்தார். இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்தபோது பிடிக்கப்பட்ட படம்.
ஊடக சுதந்திரத்துக்கான எஸ்மண்ட் விக்கிரமசிங்க விருது யாழ்ப்பாணத்தி லிருந்து வெளிவரும் உதயன் பத்திரி கைக்கு வழங்கப்பட்டது.நேற்று கொழு ம்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநா ட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து அதன் நிறுவுனர் பி. சரவணபவன் உதயன் பத்திரிகைக்கான விருதைப் பெற்றுக்கொண்டார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி அவர்களை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (27) சந்தித்தார்.
ஹைட்பார்க் திறப்பு விழாவில் பிரதமர்
புதிய அரசியல் யாப்பை நாட்டுக்கு அறிமுகப்படுத்தி நாட்டின் சுதந்திரம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.