புதிய அரசியல் யாப்பை நாட்டுக்கு அறிமுகப்படுத்தி நாட்டின் சுதந்திரம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 70வது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி, பினர நோன்மதி தினமான நேற்று (27) நியுயோர்க் நகரில் உள்ள பௌத்த விஹாரைக்குச் சென்று சமய அனுஷ;டானங்களில் ஈடுபட்டதன் பின்னர், அங்கு வருகை தந்திருந்த இலங்கை மக்களிடம் உரையாற்றும்போNது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியாக மிகப் பெறும் உதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மக்கள் தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் உரியமுறையில் பயன்படுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நியுயோர்க் பௌத்த விஹாரையின் விஹாராதிபதி குருனேகொட பியதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட நியுயோர்க் நகரில் உள்ள பௌத்த விஹாரைகளில் உள்ள மகா சங்கத்தினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதோடு, அவர்கள் பிரித் ஓதி ஜனாதிபதிக்கு ஆசீர்வதித்தனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமெரிக்காவில் வாழும் இலங்கை மக்களுடன் ஜனாதிபதி நட்புறவுடன் கலந்துரையாடினார்.