எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன் – சபாநாயகர்
38 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர்:
எட்டாவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஆர். சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
38 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர்:
எட்டாவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஆர். சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் ஜனாதிபதி வாழ்த்துச் செய்தியை இன்று பதிவிட்டுள்ளார்.
8ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக கருஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
நாளை (01) அமையவுள்ள 8ஆவது பாராளுமன்றத்திற்கான எதிர்க்கட்சித் தலைமையை எதிர்க்கட்சியில் அமரவிருக்கும் கட்சிகளின் தலைமைகள் தீர்மானிப்பதில் தாம் தலையிடப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளார் என ஐ.ம.சு.மு.வில் அங்கம் வகிக்கும் தேசிய விடுதலை முன்னணித் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு டளஸ் பாராட்டு
மாவட்டங்களில் வெற்றியீட்டிய கட்சிகளுக்கு மாவட்டக் குழுக்களில் தலைவர் பதவியை வழங்க ஜனாதிபதி எடுத்த நடவடிக்கை ஜனநாயக நடவடிக்கை என பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.