வெற்றி, தோல்வி வேறுபாடுகளை மறந்து தாய்நாட்டை கட்டியெழுப்புவோம்
“வெற்றிபெற்றோர் தோல்வியுற்றோர் என வேறு பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஒரு தாயின் மக்களாக இணைந்து செயற்பட்டு நாட்டில் புதிய அரசியல் கலாசாரமொன்றைக் கட்டியெழுப்புவோம்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


“மலையகத் தோட்டங்களில் எமது மக்களுக்கு நன்மை தரும் பல்வேறு திட்டங்களை நான் செயற்படுத்த முற்பட்ட போது மலையக எதிரணி அரசியல்வாதிகள் அதனைச் சீர்குலைத்து விட்டனர். ஐந்து பாடசாலைகளை தேசிய கல்லூரிகளாக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த போது அதனையும் தடுத்து விட்டார்கள்”