22112024Fri
Last update:Wed, 20 Nov 2024

பொதுத் தேர்தலின் பின் பேரம் பேசும் சக்தியுடன் தமிழர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்

n 444பொதுத் தேர்தலின் பின்னர் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.


நவீன இலங்கையைக் கட்டியெழுப்ப ஐந்தாண்டுத் திட்டம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி வழங்கும் திட்டமும் உள்ளடக்கப்படும்

ஹாலி - எலயில் பிரதமர் ரணில்

நாட்டு மக்களின் பொருளாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட ஐவகை அபிவிருத்திகளை மேற்கொண்டு நவீன இலங்கையை உருவாக்க ஐந்தாண்டு வேலைத்திட்டத்தினை முன்வைத்துள்ளோம்.

ஐரோ. ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு 20ல் வருகை

தேர்தல் நடவடிக்கைகளைக் கண் காணிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் 70 கண்காணிப்பாளர்களை அனுப்பவுள்ளது. முதலாவது குழுவின் தலைவர் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை வரவிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல் பணிகளில் வாகனங்களை பயன்படுத்தின் கட்டணம் அவசியம்

அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் போன்றோர் தேர்தலுக்காக விமானம் அல்லது ஹெலிகொப்டர்களை பயன் படுத்தும் பட்சத்தில் அதற்கான முழுத் தொகையையும் தனிப்பட்ட ரீதியில் செலுத்த வேண்டும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

 இது தவிர மஹிந்த ராஜபக்ஷ தன்னிடமுள்ள முன்னாள் ஜனாதிபதிக்கான சலுகைகள், வளங்கள், வாகனங்களை தேர்தலில் பயன்படுத்தினால் அதற்கும் கட்டணம் செலுத்தும் வகையில் அடுத்த அமைச்சரவையில் திருத்த யோசனை கொண்டுவர இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

*10 இலட்சம் தொழில் வாய்ப்புகள் * 45 பொருளாதார வலயங்கள் * 2500 பிரதேச பொருளாதார கிராமங்கள்: மக்கள் வாழ்வை சுபீட்சமாக்கும் வேலைத்திட்டம் அடுத்தவாரம் - பிரதமர்

ranil wickramsinghe 2நாட்டையும் மக்களையும் பொருளாதாரத்தில் கட்டியெழுப்பும் மாபெரும் வேலைத் திட்டத்தை அடுத்த வாரம் வெளியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்