அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் போன்றோர் தேர்தலுக்காக விமானம் அல்லது ஹெலிகொப்டர்களை பயன் படுத்தும் பட்சத்தில் அதற்கான முழுத் தொகையையும் தனிப்பட்ட ரீதியில் செலுத்த வேண்டும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இது தவிர மஹிந்த ராஜபக்ஷ தன்னிடமுள்ள முன்னாள் ஜனாதிபதிக்கான சலுகைகள், வளங்கள், வாகனங்களை தேர்தலில் பயன்படுத்தினால் அதற்கும் கட்டணம் செலுத்தும் வகையில் அடுத்த அமைச்சரவையில் திருத்த யோசனை கொண்டுவர இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
தேர்தலுக்காக பிரதமர், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ வாகனங்களை பயன்படுத்தினால் கட்டணம் செலுத்த தேர்தல் ஆணையாள ருடனான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டிருந்தது.
இதன்படி ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு இலட்சம் ரூபா செலுத்த அமைச்சரவையினால் விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. உத்தியோகபூர்வ வாகனத்திற் கான கட்டணத்தை அமைச்சிறிகோ, மாகாண சபைக்கோ, ஹெலிகொப்டர் நிறுவனத்திற்கோ செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்த தேர்தலில் போட்டி யிடுகிறார். அவர் முன்னாள் ஜனா திபதிக்குரிய சலுகைகளை பயன்படுத்துவ தானால் அவரும் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் இந்த அமைச்சரவை முடிவில் அது உள்ளடக்கப்படவில்லை. அடுத்த வார அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து ஆராயப்படும் என்றும் குறிப் பிட்டார். இம்முறை தேர்தலிலே முதற் தடவையாகவே அரச வாகனங்கள் பயன் படுத்துவதற்கு கட்டணம் அறவிடப்படுகிறது.