04042025Fri
Last update:Tue, 07 Jan 2025

கூகுள் நிறுவனத்துடன் இலங்கை நேற்று ஒப்பந்தம் கைச்சாத்து

tkn 07 29 nt 10 dimகூகுள் நிறுவனத்துடன் இணைந்து முழு இலங்கையும் உள்ளடங்கும் வகையில் இணைய வசதி வழங்கப்பட இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இது தொடர்பாக கூகுள் நிறுவனத்துடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் நேற்று (28) கைச்சாத்திடப்பட்டது.


60 மாதங்களில் புதிய தேசம்: ஐ.தே.மு விஞ்ஞாபனம் வெளியீடு

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு இன்று (23) பிற்பகல் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் இடம்பெற்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், “60 மாதங்களுக்குள் புதிய தேசத்தை உருவாக்கும் வகையிலான ஐந்து முக்கிய விடயங்கள்எனும் தலைப்பில் எதிர்வரும் 5 ஆண்டில் கட்சியின் கொள்கை பற்றி விளக்கப்பட்டுள்ளது.

ஆயுதப் புரட்சி மூலம் அதிகாரங்களை பகிர முடியாது

தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு விழாவில் அநுரகுமார திஸாநாயக்க

ஆயுதப் புரட்சி மூலம் அதிகாரங்களைப் பகிரமுடியாது என்பதை ஜே.வி.பி இனிமேலும் ஏற்றுக்கொள்ளாது என்பதை உறுதிப்படுத்துவதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் கண்காணிப்பில் சுயாதீனமாகவே செயற்படும்

கண்காணிப்புக் குழுவின் தலைவர் கிறிஸ்டின்

EU Election Observersஅரசியல் செயற்பாட்டாளர்களாகவின்றி சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளர்களாக இலங்கையின் தேர்தல் செயற்பாடுகளைக் கண்காணிக்கவிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைவர் பிரதான கண்காணிப்பாளர் கிறிஸ்டின் டன் பிரெடா தெரிவித்தார்

கட்சிகள், வேட்பாளர்களுக்கு கண்டிப்பான அறிவுறுத்தல்

* வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிக்கக் கட்டுப்பாடு

* வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் அலுவலகம் திறக்க அனுமதி

* துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்க பொலிஸ் பாதுகாப்பு

tkn MAHINDA DESAPIRIYA ndk 02போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தல் தொகுதிகளில் தேர்தல் அலுவலகமொன்றை அமைப்பதற்கு தேர்தல் ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளார்.