நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு இன்று (23) பிற்பகல் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் இடம்பெற்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், “60 மாதங்களுக்குள் புதிய தேசத்தை உருவாக்கும் வகையிலான ஐந்து முக்கிய விடயங்கள்” எனும் தலைப்பில் எதிர்வரும் 5 ஆண்டில் கட்சியின் கொள்கை பற்றி விளக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தை முன்னேற்றுதல், ஊழலை ஒழித்தல், சுதந்திரத்தை உறுதிப்படுத்தல், உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் முதலீ்டு செய்தல், நாட்டின் கல்வி முறையை அபிவிருத்தி செய்தல் எனும் 5 விடயங்கள் அடிப்படையில் இது அமைந்துள்ளது.
இந்நிகழ்வில் பிரதமரும் ஐ.தே.க தலைவருமான ரணில் விக்ரமசிங்க, அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன, சம்பிக ரணவக உள்ளிட்ட ஜாதிக ஹெல உருமய அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.