புதிய ஆசிரிய சேவை யாப்புக்கு அமைய 15,600 தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு விட்டதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டிலுள்ள 2,25,000 ஆசிரியர்களின் புதிய ஆசிரிய சேவை யாப்புக்கு இணங்க உள்வாங்கல் நடவடிக்கைகள் 75 வீதம் பூர்த்தி பெற்றுள்ளன.
மாகாண மட்ட ஆசிரியர்களுள் 65 வீதமானோரின் பதவி உயர்வுகளையும் வழங்க முடிந்துள்ளது.
ஏனைய பதவி உயர்வுகளை ஒகஸ்ட் 31 ம் திகதிக்கு முன்னர் வழங்கி பூர்த்தி செய்யுமாறு கல்வி அமைச்சு சகல மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது.
சில ஆசிரியர்களின் ஒழுக்காற்று உத்தரவுகள், சம்பளம் அற்ற விடுமுறை, விடுவிப்பு போன்ற காரணங்களால் பதவி உயர்வுகள் விடயத்தில் நீண்டகாலம் அவசியமாகிறது. பதவி உயர்வு தொடர் பாக மாகாண மட்டத்தில் இரண்டாம் கட்ட பயிற்சி சுற்றுக்களை ஜுலை 14 முதல் 30 வரை மாகாணங்களில் நடத்தி அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு சரியான ஆலோசனைகளை வழங்கி பதவி உயர்வு நடவடிக்கைகளுக்கான பின்னணியும் உருவாக்கப்படும். (எப்.எம்.)