19042025Sat
Last update:Tue, 07 Jan 2025

தமிழக மீனவர்கள் கைது

tkn 09 23 nt 05 dimஇந்திய மீனவர்கள் 15 பேரை காங் கேசன்துறை கடற்படையினர் கைதுசெய்து யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

யாழ். பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட போதே காங்கேசன்துறை கடற்படையினர் இவர்களை கைது செய்துள்ளனர்.

தமிழக நாகபட்டினம் மற்றும் ராமேஸ் வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இரண்டு படகுகளில் வந்து பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடித்துள்ளனர்.

அதன்போது கடற்படையினர் குறித்த மீனவர்களை கைதுசெய்து யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த 15 மீனவர்களையும் விசாரணையின் பின்னர் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.