வந்துள்ள இந்திய இராணுவத் தளபதி
tஇலங்கை வந்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். பிரதமருடன், சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, இலங்கை க்கான இந்தியத் தூதுவர் சின்ஹா ஆகியோரும் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
பத்தாயிரம் ரூபா கொடுப்பனவை இன்று (2) முதல் ஓய்வூதியக் கொடுப்பனவுடன் சேர்க்கவிருப்பதாக பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
யுத்தக் குற்றம் தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு பதிலாக உள்நாட்டு விசாரணைக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பா ட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெலிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தென்னிந்தியாவின் சென்னை விமான நிலையம் மழை வெள்ளம் காரணமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி அடைந்துவரும் ஒரு நாடாகவும் அயன மண்டல நாடாகவும் காணப்படும் இலங்கையானது பாரியளவில் காலநிலை மாற்றங்களுக்கு உள்ளாகின்ற ஒரு நாடாகும்.