23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

பிரான்சின் பரிஸ் நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான மாநாட்டில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை.

0322 1140x812 Dec1அபிவிருத்தி அடைந்துவரும் ஒரு நாடாகவும் அயன மண்டல நாடாகவும் காணப்படும் இலங்கையானது பாரியளவில் காலநிலை மாற்றங்களுக்கு உள்ளாகின்ற ஒரு நாடாகும்.

வெப்பநிலை மாற்றம், மழை வீழ்ச்சி மாற்றம் மற்றும் கடல் மட்டம் உயர்வடைதல் என்பன விவசாயம், கடற்றொழில், கால்நடை வளங்கள், நீர், உயிரியல் பல்வகைமை, சுகாதாரம், மானுடக் குடியேற்றங்கள், சுற்றுலா கைத்தொழில் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட எமது நாட்டின் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் நேரடியாக பாதிக்கின்றது.

வறட்சி, வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகியன காரணமாக ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் இலங்கை மக்களின் உயிர்களுக்கும் வாழ்வாதாரத்திற்கும் பாரிய இழப்புக்களை உண்டுபண்ணுகிறது.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன்மூலம் அந்நாட்டு மக்கள் வானிலை நிலைமைகளுக்கு இயைபாக்கம் அடையும் ஆற்றலையும் அபாயங்களை குறைப்பதற்காக தேசிய ரீதியில் பொருத்தமான செயற்பாடுகளை மேற்கொள்ளும் ஆற்றலையும் உறுதிசெய்ய முடியும்.

பூகோள பொருளாதாரத்தில் எமது தனிநபர் தூய்மை மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்பட்டாலும் காலநிலை மாற்றங்களை குறைப்பதற்காக பூகோள ரீதியில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் நாமும் பங்களிப்புச் செய்துள்ளதுடன் எதிர்காலத்திலும் பங்களிப்புச் செய்யவுள்ளோம். எமது நாட்டை நோக்குமிடத்து இலங்கையின் காலநிலைக்கு சாதகமான நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென்பதை மகிழ்ச்சியுடன் நான் அறியத்தருகின்றேன்.

1988ல் மோல்டாவில் காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் இணக்கப்பாட்டை முன்னெடுப்பதற்கு வழிகாட்டிய வரலாற்று ரீதியான ஆரம்பத்தினை நாம் இனங்கண்டோம்.

காலநிலை தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள இணக்கப்பாட்டின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான மாநாட்டினை தேசிய ரீதியாக மேற்கொள்வதற்கு எண்ணியுள்ள பங்களிப்புக்கள்பற்றி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ் வரலாற்று ரீதியான பொறுப்பினை கருத்திற்கொண்டு அபிவிருத்தி அடைந்த நாடுகளினால் மேற்கொள்ளப்படும் பூகோள ரீதியான பச்சை வீட்டு வாயு வெளியீட்டினை பாரியளவில் குறைக்கும் தேவையுள்ளது.

பொதுவான கடமைகள் தொடர்பான எண்ணக்கருவினை பின்பற்றும் தேவை எமக்கு இருந்தபோதும், இந்த நூற்றாண்டில் வெப்பநிலை அதிகரிப்பானது வளர்ச்சியானது இரண்டு பாகை செல்ஸியசிற்கு குறைந்த மட்டத்தில் பேணுவதற்காக எம்மிடம் பல்வேறு பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான ஆற்றல் நம்மிடம் காணப்படல் வேண்டும்.

பரிஸில் நடைபெறும் காலநிலை மாற்றங்கள் தொடர்பான மாநாட்டின் வெற்றியை எதிர்பார்க்கும் இலங்கை பச்சை வீட்டு வாயு உமிழ்வினை பாரியளவில் குறைத்தல், பூகோள வெப்பம் மற்றும் முன் எப்போதும் இல்லாத காலநிலை மாற்றங்களின் பாதிப்பு என்பவற்றை குறைப்பதற்கான சட்ட ரீதியான இணக்கப்பாடுகளை ஏற்படுத்த ஆர்வமாக உள்ளது.

இறுதியாக கௌரவ தலைவர் அவர்களே,  தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக இலங்கையின் இதயபூர்வமான எதிர்பார்ப்பாக பொதுநலவாய நாடுகளின் காலநிலை தொடர்பான செயன்முறையானது தற்சமயம் இடம்பெறும் இவ்வுரையாடலுக்கான பாலமாக அமையும்.

இவ்வுலகில் பிறந்த சிரேஷ்ட சூழல்வாதி புத்தபெருமானே என பௌத்த மதத்தைப் பின்பற்றும் ஒரு நபர் என்ற வகையில் நான் பலமாக நம்புகின்றேன். நிலையான அபிவிருத்திக் கொள்கை தொடர்பாக எமக்கு உபதேசித்த முதலாவது
சிந்தனைவாதியும் அவர் தான்.

எமக்கு விருந்தோம்பல் அளித்து இச்சந்தர்ப்பத்தை வெற்றியடையச் செய்வதற்கு பேருதவியாக அமைந்த இதன் ஏற்பாட்டாளர்களுக்கு இலங்கை பிரதிநிதிகளின் சார்பாக நான் நன்றி தெரிவிக்கின்றேன்.