சேயா கொலையாளிக்கு மரண தண்டனை
கொட்டதெனியாவ சிறுமி சேயா செதெவ்மியை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக சமன் ஜயலத்திற்கு மரண தண்டனை விதிப்பு.
கொட்டதெனியாவ சிறுமி சேயா செதெவ்மியை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக சமன் ஜயலத்திற்கு மரண தண்டனை விதிப்பு.
யுத்தத்தின் காரணமாக காணிகளை இழந்த தெல்லிப்பளை, கோப்பாய் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு மீண்டும் தமது சொந்த இருப்பிடங்ளைப் பெற்றுக்கொடுத்து, தெல்லிப்பளை மற்றும் கோப்பாய் பிரதேசங்களின் 701 ஏக்கர் காணிகளை அம்மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (12) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்குள்ள நலன்புரி முகாமுக்குச் சென்று சிறுவர்களுடன் உடையாடிய போது எடுக்கப்பட்ட படம்.
முதல் அமர்வில் செயற்பாட்டுக் குழு உப தலைவர்கள் தெரிவு
அரசியலமைப்பு சபை ஏப்ரல் முதல் வாரத்தில் கூட இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடை பெற இருக்கும் கட்சித் தலைவர் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளதாக அறிய வருகிறது.
அமைச்சர் சரத் பொன்சேகாவின் இன்றைய கருத்து பகிர்வுகள் ஒரு ஆரம்பம் மட்டும்தான். இதன் தொடர்ச்சியாக பல்வேறு புதுப்புது உண்மைகள், திடுக்கிடும் காட்சிகள் இன்னமும் பல வரவுள்ளன என நான் நினைக்கின்றேன். இது ஒரு சிறு கதை அல்ல, ஒரு தொடர்கதை. இதையே நாங்கள் சொன்னால் இட்டுக்கட்டிய புனைக்கதை. அதையே அவர் சொல்லும்போது அது உண்மைகளை புட்டு, புட்டு வைக்கும் வாக்குமூலம் என்பதை உலகம் புரிந்துகொள்ளும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.