“குளுக்கோமாவை தோற்கடிப்போம்” ஜனாதிபதி தலைமையில் நடைபவனி….
உலக குளுக்கோமா (glaucoma -கண் விழி விறைப்பு நோய்) வாரத்தை முன்னிட்டு ”குளுக்கோமாவை தோற்கடிப்போம்” என்ற தொனிப்பொருளின்கீழ் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நடைபவனி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (11) காலை இடம்பெற்றது.
மலையக அபிவிருத்திக்கான ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (10) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில், இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை எட்டுவதற்கு இதுவே சரியான சந்தர்ப்பம் என் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
அமரத்துவமடைந்த கண்டி அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்க தேரர் கலகம ஸ்ரீஅந்த தஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறும் 13ம் திகதியை தேசிய துக்க தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. அதேவேளை, மகாநாயக்க தேரரின் இறுதிக்கிரியைகளை பூரண அரச மரியாதையுடன் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவி திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் நேற்று தனது 83 வது வயதில் லண்டனில் காலமானார்.