இந்திய,பாகிஸ்தான் முரண்பாடுகள் பிராந்திய ஒத்துழைப்புக்கு தடை
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தியாவில் நடைபெறும் 'ரைசீனா பேச்சுவார்த்தைகள்' மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றிருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இச்சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு யாழ். நல்லூரிலிருந்து திருக்ேகதீஸ்வரம் சிவாலயாத்திற்கு நேற்று பாதயாத்திரை ஆரம்பமான போது பிடிக்கப்பட்ட படம். முதலமைச்சர் சீ.வி. விக்ேனஸ்வரன் இந்திய துணைத் தூதர் என். நடராஜன், நல்லை ஆதீனம் ஆகியோர் பாதயாத்திரை ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போது... (படம்: சற்குருநாதன்)
பலாலி விமான நிலைய அபிவிருத்தியை நிறுத்துமாறோ அல்லது மட்டுப்படுத்துமாறோ கேட்கவில்லை. அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களை மீளக்குடியமர்த்திய பின்னர் சகலவிதமான அபிவிருத்திகளையும் முன்னெடுக்குமாறே தான் கோரிக்கை விடுத்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தினகரனுக்குத் தெரிவித்தார்.
அமைச்சர் ஜோன்அமரதுங்க நேற்று (02) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் காணி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
பஸ் உரிமையாளர்கள், சாரதிகள் ஆகியோரிடம் கப்பம் அறிவிடுவதை தடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைகளின் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.