அந்தோனியார் திருவிழா; இருநாட்டவரும் பங்கேற்பு
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று 21ஆம் திகதி வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து 7853 பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று 21ஆம் திகதி வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து 7853 பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இந்து ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் மிருகபலிகளை சட்டரீதியாகத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இந்துசமய விவகார, மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இது தொடர்பான சட்டமூலமொன்றை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் தினகரனுக்குத் கூறினார்.
கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பு வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் வடக்கு, வடமேல் மாகாண பனை தென்னை வள கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலர் நேற்று (11) மாலை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தனர்.
புதிய கண்டுபிடிப்பாளர்களைப் பலப்படுத்தி அவர்களது கண்டுபிடிப்புகளுக்கான சந்தை வாய்ப்புகளை விரிவுப்படுத்திக் கொடுப்பதற்கு ஒரு விசேட நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.