'சிங்ஹ லே' அமைப்பை கட்டுப்படுத்த வேண்டும்
துவேசத்தை விதைத்து மக்கள் மத்தியில் இன மத ரீதியிலான பிரிவுகளை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் "சிங்ஹ லே" வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
துவேசத்தை விதைத்து மக்கள் மத்தியில் இன மத ரீதியிலான பிரிவுகளை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் "சிங்ஹ லே" வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹுசைன் நேற்று யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கு விஜயம் செய்து அரசியல் பிரமுகர்களையும், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்திருந்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முதலமைச்சர்கள், ஆளுநர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் என பலதரப்பட்ட சந்திப்புக்களிலும் அவர் கலந்துகொண்டிருந்தார்.
எந்த மதத்தினதும் உள்ளக விடயங்களிலோ ஒழுக்கக் கட்டுப்பாடுகளிலோ பாராளுமன்றத்திற்கு தலையிட முடியாது. கோரிக்கை முன்வைக்கப்பட்டால் மாத்திரமே தேவையான சட்டங்களை அமைக்க முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பெப்ரவரி 4ஆம் தினமாகிய நாளைய தினம் எமது நாட்டின் 68வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாட இருக்கின்றோம். இவ்வேளையில் எமது மக்களின் மனங்களில் பாரிய தெளிவான மாற்றம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் நாம் நினைவு கூரும் சுதந்திர தினம் அர்த்தமுள்ளதாக அமையும்.
விசேட வர்த்தமானி வெளியீடு
பாரிய நிதி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.