பீல்ட் மார்ஷல் பாராளுமன்ற உறுப்பினர்
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று (09) சபாநாயகர் கருஜயசூரிய முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்தார்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று (09) சபாநாயகர் கருஜயசூரிய முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்தார்.
யுத்த காலத்தில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த 43 இலங்கை அகதிகள் இன்று விமானம் மூலம் நாடு திரும்புகின்றனர். திருச்சி, சென்னை மற்றும் மதுரை ஆகிய விமான நிலையங்களிலிருந்து மூன்று விமானங்களில் இவர்கள் நாடு திரும்பவுள்ளனர். 2016ஆம் ஆண்டில் மாத்திரம் இதுவரை 61 பேர் இவ்வாறு நாடு திரும்பியிருக்கும் நிலையில், இன்று நாடு திரும்பும் 43 பேரில் 24 ஆண்களும், 19 பெண்களும் அடங்குவதுடன், இவர்கள் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மன்றும் மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.
நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்கு உள்ளக பொறிமுறை மூலம் தீர்வுகாண முடியுமென்றும் சர்வதேச பொறிமுறையொன்றிற்கான அவசியம் கிடையாதென்றும் கண்டி மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் இருவரும் ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் செய்த் அல் ஹுசைனிடம் தெரிவித்தனர்.
எல்லா மக்கள் மத்தியிலும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி நாட்டை அபிவிருத்தியை நோக்கிக் கொண்டு செல்வதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைத்த விசேட பிரகடனம் இந்திய அரசாங்கத்தின் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் திருமதி சுஸ்மா சுவராஜ் தெரிவித்தார்.
இந்தியாவில் இடம்பெற்று வரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இது வரை பெற்ற பதக்கங்களின் அடிப்படையில் 5 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலம் உள்ளடங்கலாக இலங்கை அணி 25 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தை வகிக்கின்றது.