மறைக்கப்பட்ட ரூ.1151 பில். செலவீனம் கண்டுபிடிப்பு
கடந்த அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட 1151 பில்லியன் ரூபா செலவீனங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியிருப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துக்குக் கூடத் தெரியப்படுத்தாது இந்த செலவீனங்கள் மறைக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் மீது சுமையை ஏற்படுத்தாது இதனை ஈடுசெய்வது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடவிருப்பதாகவும் கூறினார்.
ஓர் அமைப்புக்கு எதிராகவே இராணுவம் செயற்பட்டதே தவிர தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் ஒரு போதும் செயற்பட்டதில்லையென மேஜர் ஜெனரல் ஆர்.எம்.ஜே.ஏ.ரத்நாயக்க தெரிவித்தார்.வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் கடந்த ஒரு வருடங்களாக புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் போராளிகள் 14 பேர் நேற்று (29) விடுதலை செய்யப்பட்டனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கு புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன இந்நியமனங்களை வழங்கினார்.
இலங்கையில் பண்ணை மேம்பாட்டு பயிற்சி முன்னெடுப்புக்கான ஒரு கூட்டு உடன்படிக்கையில் இலங்கையும் நியூசிலாந்தும் இன்று (24) கைச்சாத்திட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் ஆலோசனைக்கு அமையவும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கரவின் நெறிப்படுத்தலில் வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி விளையாட்டு விருது வழங்கும் விழா எதிர்வரும் மே மாதம் 13ம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மா நாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.