17052024Fri
Last update:Wed, 08 May 2024

வடக்கில் பூரண ஹர்த்தால் இயல்பு முற்றாக பாதிப்பு

page 01 d 24022016 kaa cmyவல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வடக்கில் நேற்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதனால், யாழ்ப்பாணம் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இயல்வு நிலை பாதிக்கப்பட்டது. மாணவியின் கொலையைக் கண்டித்து வடக்கின் கண்டனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததோடு, அனுதாப பனர்களும் தொங்கவிடப்பட்டிருந்தன. பொது அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹர்த்தாலையடுத்து வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.


இந்திய தூதுக் குழுவுடன் பேசிய பின்பே ஒப்பந்தம் இறுதி வடிவம்

Ranil 1172416050 4040015 23022016 att cmyஇந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தம் இந்த வருட நடுப்பகுதியில் கைச்சாத்திடப்படஇருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதில் வெளிநாட்டவர் தொழில்புரிய இடமளிக்கும் சேவைத்துறை விடயம் நீக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மார்ச் 4ஆம் திகதி இங்குவரும் இந்திய தூதுக்குழுவுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் இறுதி வரைபு தயாரிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இரகசியமாக எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படாது என்று தெரிவித்த அவர் இறுதி ஒப்பந்த வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சகல தரப்பினரினதும் கருத்துக்கள் பெறப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு கூடுதல் நிதியுதவி 3 ஆண்டுகளில் வழங்க திட்டம்

coldig2186541180616516 4040055 23022016 kaa cmyஜனாதிபதியிடம் ADB தலைவர் உறுதி

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி கடந்த ஆண்டுகளைவிட கூடுதலான உதவிகளை எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் வழங்கவுள்ளதாக அதன் தலைவர் தெக்கெஹிக்கே நக்காவோ (Takehiko Nakao) தெரிவித்தார். இலங்கைக்கு வந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்நேற்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைசந்தித்தபோதே இதனைத் தெரிவித்தார். இலங்கையின் கல்வி மற்றும் நீர்ப்பாசனத்துறைகளின் மேம்பாட்டுக்காக விசேட உதவிகளை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தயாரெனத் தெரிவித்த அவர், உட்கட்டமைப்பு வசதிகளுக்காக விசேட உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

போட்டித்தன்மை வாய்ந்த உலக பொருளாதாரத்தில் முன்னோக்கிச் செல்ல இலங்கை தயாராக உள்ளது.

President in Berlinபோட்டித்தன்மை வாய்ந்த உலக பொருளாதாரத்தில் முன்னோக்கிச் செல்ல இலங்கை தயாராக உள்ளமையால் அச்சமின்றி இலங்கைக்கு வந்து முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஜேர்மன் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

தேச நல ஒப்பந்தங்களை எதிர்ப்போர் துரோகிகள்

untitled 1 22சர்வதேச சந்தை வாய்ப்புக்களை இலக்கு வைத்து இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்கு எதிராக செயற்படுபவர்கள் துரோகிகள் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.