22112024Fri
Last update:Wed, 20 Nov 2024

இலங்கையிலுள்ள சாதாரண மக்களின் அபிலாஷைகளில் இந்தியாவின் விழிப்பு அவசியம்

75e45b6786d0ee04866137fde1df8b6c 01022016 kaa gryமஹாவன்சத்தின் அடிப்படையில் சிங்கத்துடன் இரத்த சம்பந்தம் இருப்பதாக சிங்களவர் கூறுவதற்கு இந்தியா மீதான அச்சமே காரணம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள சாதாரண மக்களின் அபிலாஷைகள் மற்றும் நம்பிக்கை தொடர்பில் இந்தியா விழிப்புடன் இருக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், அடிவலை ட்ரோலிங் மீன்பிடி போன்றவை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பது மட்டுமன்றி ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கைய பாதிக்கிறது. இவ்வாறான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். மாறாக இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தோற்றுவிப்பதற்கு இது காரணமாக அமையக்கூடாது என்றும் கூறினார்.

இலங்கை இந்திய சங்கத்தின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகளில் கடந்த வருடம் முக்கியமானதொரு ஆண்டாக அமைந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தியப் பிரதமர் இலங்கை வந்திருந்ததுடன், இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்தியா சென்றிருந்தனர். இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை வரவுள்ளார். இவை இருநாட்டு உறவுகளையும் பறைசாற்றுகின்றன.

பிழையாக வழிநடத்தப்பட்ட சிங்கள மக்கள் இனவாதம் மற்றும் மதத்தை கைகளில் ஏந்தியிருப்பதுடன் மற்றும் மஹாவன்சத்தின் படி சிங்கத்துடன் இரத்த சம்பந்தம் இருப்பதாகக் கூறுகின்றனர். இதற்கு காரணம் இந்தியா மீதான அச்சம்.

புராணக் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ள இனங்கள் மீள வலியுறுத்தப்படுகின்றன. அதற்காக இலக்கிய ரீதியாக இனங்களைக் கொண்டுசெல்ல முடியாது.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் இந்திய சிங்கத்துடன் இரத்த சொந்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது சிங்கள இனம் மிருகப்புணர்ச்சியால் ஏற்பட்ட இனமா என்ற அச்சம் தோன்றுகின்றது என்றும் தெரிவித்தார்.