கொட்டதெனியாவ சிறுமி சேயா செதெவ்மியை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக சமன் ஜயலத்திற்கு மரண தண்டனை விதிப்பு.
குறித்த கொலை வழக்கில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமன் ஜயலத்திற்கே இன்று (15) நீர்கொழும்பு உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
பிரதான சந்தேகநபரான சமன் ஜயலத்திற்கு எதிராக, சிறுமியை கடத்தியமை(1), கற்பழிப்பு செய்தமை(2), பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை(3) மற்றும் கொலை செய்தமை(4) உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது.
அதற்கமைய 1 ஆவது குற்றச்சாட்டிற்கு 20 வருட சிறை மற்றும் ரூபா 10,000 தண்டப் பணமும் விதிக்கப்பட்டதோடு தண்டப் பணத்தை செலுத்தாவிடின் மேலும் ஒரு வருட சிறையும், 2 ஆவது குற்றச்சாட்டிற்காக 20 வருட சிறை மற்றும் ரூபா 10,000 தண்டப் பணமும் விதிக்கப்பட்டதோடு தண்டப் பணத்தை செலுத்தாவிடின் மேலும் ஒரு வருட சிறையும் விதிக்க்பட்டது.
அத்துடன் 3 ஆவது குற்றச்சாட்டிற்காக 20 வருட சிறை மற்றும் ரூபா 25,000 தண்டப் பணமும் விதிக்கப்பட்டதோடு தண்டப் பணத்தை செலுத்தாவிடின் மேலும் இரு வருட சிறையும், 4 ஆவது குற்றச்சாட்டிற்காக மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.