22112024Fri
Last update:Wed, 20 Nov 2024

யாழ். மக்கள் மத்தியில் நிம்மதிப் பெருமூச்சு

யாழ். குடாநாட்டில் சமீப காலமாக குற்றச்செயல்கள் கட்டுமீறிச் சென்றதன் காரணமாக அச்சத்துக்கும் கவலைக்கும் உள்ளாகியிருந்த மக்கள் தற்போது ஓரளவு நிம்மதியடையத் தொடங்கியுள்ளனர். அங்கு இடம்பெற்று வந்த குற்றச் செயல்கள் குறுகிய காலத்துக்குள் பெருமளவு தணிந்தி ருப்பதைக் காண முடிகிறது. அமைதியை விரும்புகின்ற மக்க ளைப் பொறுத்தவரை அவர்கள் இப்போது நிம்மதியடைந்திரு க்கின்றனர்.


சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பின்றி 20 திருத்தம்

* பல்கட்சி அரசியல் கலாசாரம் தொடர்ந்தும் பேணப்படும்

* சிறுபான்மை கட்சித் தலைவர்களின் அலரிமாளிகை சந்திப்பில்; பிரதமர் உறுதி

அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கொண்டு வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களிடம் நேற்று உறுதியளித்தார். 20வது திருத்தம் குறித்த அதிருப்தி களை இச்சந்திப்பில் கலந்து கொண்ட சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர். இதன் போதே.

தேர்தலுக்குப் பின்னர் நாட்டில் பாரிய அபிவிருத்திகள்

வீதி நிர்மாணம் உட்பட நிலுவையாகவுள்ள திட்டங்களை நிறைவு செய்வதில் கூடிய கவனம்

nnn2தேர்தலுக்குப் பின்னர் நாட்டில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேறு எந்த அரசாங்கமும் செய்ய முடியாத திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், நாட்டைப் பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடரும் என்றும் குறிப்பிட்டார்.

திருத்தங்களுடன் 20 நிறைவேறும்: எவரும் எதிர்பாராத நேரம் பாராளுமன்றம் கலையலாம்

த. மு. கூவிடம் ஜனாதிபதி உறுதி

MANO GANESANதமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வி. இராதாகிருஷ்ணன் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடியுள்ளனர். இந்த சந்திப்பு நேற்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

புங்குடுதீவு மாணவி படுகொலை விசாரணை: ஒன்பது சந்தேக நபர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க உத்தரவு

* வாக்குமூலம் அளித்த தாயும் சகோதரனும் நீதிமன்றில் மயங்கி விழுந்தனர்

* சந்தேகநபர்களை கொழும்புக்கு அழைத்து செல்ல அனுமதி

n ed புங்குடுதீவு மாணவி வித்யாவின் படுகொலை சந்தேகநபர்கள் 9 பேரையும் பயங்கர வாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 30 நாட்கள் கொழும்பில் தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு ஊர்காவற்துறை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நேற்றையதினம் நடைபெற்ற வித்யா படுகொலை மரணவிசாரணை வழக்கினை விசாரித்த ஊர்காவற்துறை நீதவான் லெனின்குமார் இதற்கான அனுமதியை வழங்கினார்.