22112024Fri
Last update:Wed, 20 Nov 2024

மலையக ஆசிரியர் உதவியாளர்: 360 பேர் நாளை நியமனம்

மலையக ஆசிரியர் உதவியாளர் நியமனத்தின் இரண்டாம் கட்டம் நாளை (04) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு பத்தர முல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இங்கு 360 ஆசிரியர் உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது.


19 ஆவது திருத்தம் சபையில் நிறைவேற்றம்

ஆதரவு 212
எதிர் - 01
நடுநிலை - 01 சமுகமளிக்காதோர் - 10

PresidentRANIL ndk 4 150px

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது தொடர்பான அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் நீண்ட இழுபறிக்குப் பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்றை பலப்படுத்தி வரலாற்று முக்கியத்துவத்தை ஏற்படுத்தியவர் ஜனாதிபதி

சபையில் பிரதமர்

நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவாகும் எவரும் தமது அதிகாரத்தை கைவிடுவதில்லை. அந்த கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாற்றியு ள்ளார். பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்காக வரலாற்று முக்கியமான நடவடிக்கையை அவர் எடுத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்திய மீனவர்களே இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறல்

தங்கம், போதைப் பொருள் கடத்தலிலும் ஈடுபாடு; இந்திய கடலோர காவற் படையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைவது மட்டுமல்ல இலங்கை மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களையும் இந்திய மீனவர்கள் சேதப்படுத்துகின்றனர். இந்திய மீனவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாலேயே அவர்களை இலங்கை கைது செய்கின்றதென இந்திய கடலோர காவல்படையின் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்திய மீனவர்கள் தங்கம், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர்.

குற்றவாளிகளுக்கு உச்சதண்டனை

யாழ்ப்பாணத்தில் வித்தியாவின் தாயிடம் ஜனாதிபதி அறிவிப்பு

President 12யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்பு பட்ட குற்றவாளிகளுக்கு விசேட நீதிமன்றம் மூலம் உச்ச தண்டனையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்துக்கு நேற்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி அங்கு நிலைமைகளை ஆராய்ந்ததுடன் இத்தகைய சம்பவங்கள் நாட்டில் இனி ஒருபோதும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.