சொந்தக்கிராமம் எனும் உரிமையை மலையக மக்களுக்கு பெற்றுக் கொடுத்தது இந்த அரசு
தலவாக்கலையில் பிரதமர் உரை
வரலாற்றில் தமது சொந்த கிராமம் என பெருமைப்பட்டுக்கொள்ளும் உரிமையை மலையக மக்களுக்கு தமது அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சம்பூரில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்கு ஒதுக்கப்பட்ட 818 ஏக்கர் காணிகளை மக்களுக்கு மீண்டும் வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் 2.2 ட்ரில்லியன் டொலர் (18பில்லியன் டொலர்) சொத்துக்கள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
தற்பொழுது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பு பல தடவைகள் திருத்தப்பட்டிருப்பதால் புதிய அரசியல மைப்பொன்றைத் தயாரிக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக அரசியலமைப்பு சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.