20 ஆவது திருத்தத்தின் பின் பாராளுமன்றம் கலைப்பு
விகிதாசார முறையிலேயே பொதுத் தேர்தல்
அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தின் பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்த அமைச்சர் கபீர் ஹாசிம், தற்போதைய விகிதாசார தேர்தல் முறையிலேயே பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிடையில் முக்கிய சந்திப்பொன்று நாளை புதன்கிழமை கொழும்பில் இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப் படுகின்றது. இச்சந்திப்பு பெரும் பாலும் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் எனக் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது தொடர்பான
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் நீண்ட இழுபறிக்குப் பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.