22112024Fri
Last update:Wed, 20 Nov 2024

20 அமைச்சரவை அங்கீகாரத்துக்கு எதிராக சிறுபான்மை கட்சிகள் போர்க்கொடி

n 3abஅமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் தேர்தல் முறை மாற்றத்தை உள்ளடக்கிய 20ஆவது திருத்தச்சட்டத்தை எதிர்ப்பதற்கு சிறுபான்மைக் கட்சிகள் தீர்மானித்திருப்பதாகத் தெரியவருகிறது.

சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கக் கூடிய வகையிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு இணங்க முடியாதென்றும், அவ்வாறு முன்வைக்கப்படும் எந்த யோசனைக்கு எதிராக வாக்களிக்கவும் சிறுபான்மைக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன.

விகிதாசார மற்றும் விருப்புவாக்கு முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை நிலைப் பாட்டில் ஒருமித்த கருத்தில் உள்ள சிறுபான்மைக் கட்சிகள், பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் இணங்கமுடியாத நிலையில் உள்ளன.

இதேவேளை, பாராளுமன்ற உறுப் பினர்களின் எண்ணிக்கை தற்பொழுது காணப்படுவதைப் போன்று 225ஆகவே காணப்படவேண்டும் என்றும், இந்த எண்ணிக்கை கூட்டப்படக்கூடாது என்பதே தமது நிலைப்பாடு என்றும் ஐ.தே.க கூறியுள்ளது.

எம்பிக்களின் எண்ணிக்கையை 237ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ள நிலையிலேயே ஐ.தே.க இவ்வாறு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சிறுபான்மை கட்சிகளும், சிறிய கட்சிகளும் நேற்றுக் கூடி புதிய தேர்தல் முறை தொடர்பில் ஆராய்ந்திருந்தன. சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் எந்த யோசனைக்கும் இணங்குவதில்லையென்ற நிலைப்பாட்டில் இச்சந்திப்பு நடை பெற்றிருந்தது.

உத்தேச தேர்தல் முறையின்படி, வடக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 இல் இருந்து 7ஆகக் குறையும் சாத்தியக்கூறுகள் உள்ளது. இவ்வாறானதொரு முறைக்கு தாம் இணங்கப் போவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித் துள்ளார். 160 ஆக இருந்த தொகுதிகள் 145 ஆகக் குறைக்கப்படும்போது எந்தத் தொகுதிகள் குறைக்கப்படும் என்ற கேள்வி எழுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேநேரம், சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் வகையில் தாம் முன்மொழிந்த இரட்டைத் தெரிவுமுறை இல்லாவிட்டால் நீதிமன்றம் செல்லப்போவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுஇவ்விதமிருக்க 225 உறுப்பினர்களின் எண்ணிக்கை 237ஆக அதிகரிக்கப்பட்டி ருப்பது முதல் வெற்றியாக இருக்கின்ற போதும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என ஜனநாய மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.