19042024Fri
Last update:Thu, 18 Apr 2024

இலங்கை நிலச்சரிவில் காணமல் போனவர்களை தேடும் பணியில் ராணுவம் தீவிரம்

160522120400 misplaced srillanka 640x360 bbc nocreditஇலங்கையில் பாரிய நிலச்சரிவு அனர்த்தம் ஏற்பட்ட கேகாலை மாவட்டத்திலுள்ள அரநாயக்கா பிரதேசத்தில், நிலத்தில் புதையுண்டு காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணியில், ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.


அரநாயக்கவில் இன்றும் 5 உடல்கள் மீட்பு; 100 பேர் வரை காணவில்லை

5 more bodies found in aranayakeஇது வரை மீட்பு 30 சடலங்கள் மீட்பு

அரநாயக்க, சாமசர மலைப் பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கிய மேலும் ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஐ.ம.சு.மு மே தினக் கூட்டம்; மஹிந்தவுக்கு நேரில் அழைப்பு

n 12ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க இருப்பதாக அதன் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர நேற்று(20) தெரிவித்தார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயற்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட மஹிந்தானந்த அளுத்கம,குமார வெல்கம,பவித்ரா வன்னியாரச்சி ஆகிய அனைவரையும் மே தினக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறு சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்பாட்டுக்குழுவில் ஜனாதிபதி தலைமையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நல்லிணக்கத்தை விரும்பாத தேசவிரோத சக்திகள்!

tkn editoநீண்டதொரு ஆயுதப் போராட்டம் காரணமாக நாடு பாரிய பின்னடைவைக் கண்டிருந்த நிலையில், அந்த மோசமான நெருக்கடியிலிருந்து 2015 ஜனவரி 8 இல் நாடு மீட்கப்பட்டது. அன்று முதல் நாட்டில் நல்லாட்சி மலரத் தொடங்கியது. இதன் காரணமாக இனவாதச் சக்திகளின் வாய்களுக்குப் பூட்டுப் போடப்பட்டிருந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனவாதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்ததன் காரணமாக அந்தச் சக்திகள் பெட்டிப்பாம்புகளாக அடங்கிப் போயின. எந்தவொரு இனவாதத் தரப்பும் மூச்சு விட முடியாத நிலையையே காண முடிந்தது.

வற்வரியில் திருத்தம்

z p06 security 20042016 kaaஅத்தியாவசிய பொருட்கள், நீர், மின்சாரம், மருந்து வகைகளில் அதிகரிப்பில்லை

மின்சாரக் கட்டணம், நீர் கட்டணம், அத்தியாவசியப் பொருட்களின் விலை மற்றும் மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிக்காத வகையில் எதிர்வரும் மே மாதம் இரண்டாம் திகதி முதல் வற் வரியில் திருத்தம் கொண்டுவரப்படவிருப்பதாக இராஜாங்க நிதி அமைச்சர் லக்ஷ்ம யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.