ஆணைக்குழு நியமிக்காவிடின் சட்டமூலம் பயனற்றதாகி விடும்
தகவல் அறியும் சட்டமூலத்திற்கிணங்க தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு நியமிக்காவிட்டால் சட்ட மூலம் முற்றாக பயனற்றதாகிவிடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. எம்.ஏ. சுமத்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிதி மோசடி விசாரணைப் பிரிவின் கைது மற்றும் விசாரணை நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் அரசியல் உயர் மட்ட தலையீடுகள் இடம்பெறுவதாக எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அநுர குமார திசாநாயக்க எம்.பி. நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தியாவின் பிரபல வயலின் வித்துவானும் வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தின் சங்கீதப் பேராசிரியருமான வீ. பாலாஜி அவர்கள் இன்று (22) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களைச் சந்தித்தார்.
அரச கரும மொழிகள் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதை அரசியலமைப்பில் உள்ளடக்குவது குறித்து கவனம் செலுத்தியிருப்பதாக திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சிகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். இதனைச் செய்வதன் ஊடாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் நேற்று முன்தினம் கொழும்பில் தெரிவித்தார்.
யாழ். நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகள் ஐவரை பாலியல் துஷபிரயோகம் செய்ய முயற்சித்தார் என குற்றசாட்டப்பட்ட ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.